இதெல்லாம் சரிப்படாது., மீண்டும் காப்பியடிக்க கிளம்பிய அஜித்.! லீக்கான AK62 கதை...

by Manikandan |
இதெல்லாம் சரிப்படாது., மீண்டும் காப்பியடிக்க கிளம்பிய அஜித்.! லீக்கான AK62 கதை...
X

அஜித் ரசிகர்களுக்கு வலிமை வந்த வாரம் எப்படி இருந்ததோ தெரியாது. ஆனால், அதற்கடுத்த வாரங்கள் முழுவதும் ஒரே கொண்டாட்டமாக தான் இருந்திருக்கும். அடுத்தடுத்து அப்டேட்கள், போட்டோக்கள், செய்திகள் என வலம் வர தொடங்கின.

அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் தனது 61வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க வினோத் திரைப்படமாக எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அப்படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது.

ajith

அதனை அடுத்து அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்கிற செய்தி கோலிவுட்டில் தீயாய் பரவியது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. 61வது படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் இந்த 62வது பட ஷூட்டிங் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் - என்ன நடந்தாலும் வெளிய சொல்லக்கூடாது.! ரஜினியின் ஒரே கண்டிஷன் இதுதான்.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்றவுடன் எப்படியும் காதல், ரொமாண்ஸ் என இருக்கும் என எதிர்பார்த்தால், அது அப்படி இல்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிவாஜி பட ரஜினி போல பெரும் பணக்காரரான கதாநாயகன் ஹோட்டல் வைத்து பெரிய மனிதராக வளர்க்கிறார்.

அதனை வில்லன் குரூப் காலி செய்து கடைசியில் ஒரு ரூபாய் கூட இல்லாதவராக மாற்றிவிடுவாராம். அதற்கப்புறம் எப்படி வில்லனை நாயகன் பழிவாங்குகிறார் என்கிற கதைதான் என செய்திகள் வெளியுள்ளன. இது அப்படியே சிவாஜி பட கதை போல இருக்கிறது. இதே போல தான் அஜித் இதற்கு முன்னர் ரஜினியின் பில்லா படத்தை ரீ மேக் செய்து வெற்றிகண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story