எல்லா பயலுகளும் ரெடியா இருங்க!...அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் இணையப்போகும் அந்த பிக்பாஸ் பிரபலம்!..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் டப்பிங் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள் படக்குழு.
அது சம்பந்தமான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த படத்தை
தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் இணைய இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் நாயகியாக திரிஷா இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க : கௌதம் மேனனுக்கு நடந்த லவ் ஃபெயிலர்!! சினிமா வசனமாக மாறிப்போன முன்னாள் காதலியின் வார்த்தைகள்…
இந்த நிலையில் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து நடிக்க இருப்பதாக தற்போது சமூக ஊடகங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றது. இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக ஜிபி.முத்து வே
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது உறுதிபடுத்தும் விதமாக அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜிபி.முத்து டிக்டாக், யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகி பிக்பாஸில் நுழைந்தவர். பிக்பாஸ் வீட்டில் எப்படியும் பரிசினை முத்து தான் வெல்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்தார் ஜிபி.முத்து.