கை கொடுத்த நிறுவனத்தையே கைகழுவிய அஜித்.! பின்னணியில் பெரிய நடிகையின் கைவரிசை.!

by Manikandan |
கை கொடுத்த நிறுவனத்தையே கைகழுவிய அஜித்.! பின்னணியில் பெரிய நடிகையின் கைவரிசை.!
X

சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் அதிகமாக பேசப்பட்ட அப்டேட் என்றால் அது அஜித்தின் 62வது திரைப்படத்தின் அப்டேட் தான். அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் இந்த வருடம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதற்காக இதுவரை அஜீத் வாங்காத சம்பளத்தை அஜித்திற்கு கொடுக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

முதலில் இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்ததாம். அந்நிறுவனம் அஜித்திற்கு சுமார் 80 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளம் பேசியதாம்.

இதனையறிந்த, நயன்தாரா தனது நண்பரும், தயாரிப்பளருமான லைகா நிறுவன அதிகாரி சுபாஸ்கரன் அவருடன் பேசி, அஜித்திடம் விக்னேஷ் சிவன் கதை கூறியுள்ளார். அவரும் ஒப்புக்கொண்டு விட்டார். அதனால் நீங்கள் முதலில் அதிகமாக சம்பளம் பேசினால் அஜித் உங்கள் படத்தில் நடிக்க கமிட்டாகி விடுவார் என ஆலோசனை கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன் - கமல்ஹாசனின் எந்திரன்.! அஜித்குமாரின் ஜீன்ஸ்.! ஷங்கரின் முதல் ஹீரோக்கள் ஓர் ரிப்போர்ட்…

இதனையடுத்து தான் லைகா நிறுவனம் ஒரேடியாக அஜித்திற்கு நூறு கோடி ரூபாய் சம்பளம் பேசி அஜித்தை புக் செய்துள்ளதாம்.

சத்யஜோதி நிறுவனம் அஜித் நடித்த விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை தயாரித்து இருந்தது. விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத போதும், அடுத்து உடனடியாக அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story