அஜித்திற்கு கிட்டத்தட்ட ஒரு நேரத்தில் தொடர்ந்து தோல்விப் படங்கள் வெளியான சமயம் அது. அப்போது ஓர் பெரிய வெற்றி தேவைப்பட்டது. அந்த சமயம் பில்லா எனும் ஸ்டைலான சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன். அதன்மூலம் அஜித்தின் நெருங்கிய நண்பராகவும் மாறிவிட்டார்.
அதற்கடுத்ததாக மீண்டும் அஜித்தை வைத்து ஆரம்பம் எனும் சூப்பர் ஹிட் படத்தையும் இயக்கி இருந்தார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அதன் பின்னர் அஜித்தின் ஒவ்வொரு திரைப்படம் முடியும் போதும் அடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் தான் எனுமளவிற்கு பேச்சுகள் எழும்.
ஆனால், அது அப்படியே அடங்கி விடும். ஆனால் இந்த முறை அதாவது வினோத் தொடர்ந்து மூன்று முறை அஜித்தை இயக்க முன் வந்து விட்டார். இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது ஒரு படம் தற்போது தயாராகி வருகிறது.
இந்தப்படம் முடித்தவுடன் அடுத்ததாக விஷ்ணுவர்தன் திரைப்படம் தான் என தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அதற்கேற்ற நகர்வுகள் நடைபெற்று வந்தன.
இதையும் படியுங்களேன் – போனி மாம்ஸ் பொண்ணு நயன்தாராவுக்கு போட்டியா களம் இறங்கிடிச்சி.! முழு விவரமும் உள்ளே.!
ஆனால் இறுதியில் அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் சென்று விட்டது. விஷ்ணுவர்தனும் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் அஜித்திற்காக சில வருடங்கள் காத்திருந்தார் என்பதே உண்மை. ஆனால் அஜித் தரப்பு அதற்கு செவி சாய்க்கவில்லையா அல்லது அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டார்களோ என தெரியவில்லை.
விஷ்ணுவர்தன் அடுத்து யார் படத்தை இயக்குகிறார் அல்லது ஒருவேளை விஷ்ணுவர்தன் திரைப்படம் 63வது திரைப்படமாக வெளியாகுமா என்பது குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் ஏதேனும் வெளியானதால் உண்மை தெரியவரும்.
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…