22 முறை அஜீத்துடன் மோதிய பிரசாந்த் படங்கள்!. ஜெயித்தது அல்டிமேட் ஸ்டாரா?.. டாப் ஸ்டாரா?..

அல்டிமேட் ஸ்டார் தல அஜீத்துடன் டாப் ஸ்டார் பிரசாந்த் படங்கள் 22 முறை மோதியுள்ளன. இவர்களில் ஜெயித்தது யாருன்னு பார்ப்போமா...

முதன் முதலாக இருவரது படங்களும் 1994ல் மோதின. அப்போது பிரசாந்த் நடித்த செந்தமிழ் செல்வன், அஜீத் நடித்த பவித்ரா. இதுல பிரசாந்த் வின்னர். 1996ல் அஜீத் நடித்த வான்மதி படமும், பிரசாந்த் நடித்த கல்லூரி வாசல் படமும் ரிலீஸ் ஆனது. இவற்றில் அஜீத் தான் வின்னர். அதே ஆண்டில் அஜீத் நடித்த மைனர் மாப்பிள்ளை, பிரசாந்த் நடித்த கிருஷ்ணா படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர். 1997ல் அஜீத் நடித்த நேசம், பிரசாந்த் நடித்த மன்னவா படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர்.

Prasanth, Ajith

Prasanth, Ajith

1998ல் பிரசாந்த் நடித்த ஜீன்ஸ், அஜீத் நடித்த காதல் மன்னன், அவள் வருவாளா படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் பிரசாந்த் நடித்த கண்ணெதிரே தோன்றினாள், அஜீத் நடித்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படங்கள் ரிலீஸ். இதுல இருவரும் வின்னர். அதே ஆண்டில் அஜீத் நடித்த தொடரும், பிரசாந்த் நடித்த காதல் கவிதை படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் அஜீத் நடித்த வாலி, பிரசாந்த் நடித்த பூ மகள் ஊர்வலம் படங்கள் ரிலீஸ். இதுல அஜீத் தான் வின்னர்.

1999ல் பிரசாந்த் நடித்த ஜோடி, அஜீத் நடித்த அமர்க்களம், நீ வருவாய் என படங்கள் ரிலீஸ். இதுல மூன்று படங்களும் வெற்றி. 2000த்தில் அஜீத் நடித்த முகவரி, பிரசாந்த் நடித்த குட்லக் படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் அஜீத் நடித்த உன்னை கொடு என்னை தருவேன், பிரசாந்த் நடித்த அப்பு படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர்.

2001ல் அஜீத் நடித்த தீனா, பிரசாந்த் நடித்த பிரியாத வரம் வேண்டும் படங்கள் ரிலீஸ். இதுல அஜீத் தான் வின்னர். அதே ஆண்டில் அஜீத் நடித்த சிட்டிசன், பிரசாந்த் நடித்த ஸ்டார் படங்கள் ரிலீஸ். இதுல அஜீத் தான் வின்னர். அதே ஆண்டில் அஜீத் நடித்த பூவெல்லாம் உன் வாசம், பிரசாந்த் நடித்த சாக்லெட் படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர். அதே ஆண்டில் பிரசாந்த் நடித்த மஜ்னு, அஜீத் நடித்த ரெட் படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர்.

இதையும் படிங்க... காலங்காலமாக இந்த நடிகருக்கு நன்றிக்கடன் பட்டவன் நான்! யாரை சொன்னார் தெரியுமா வடிவேலு?

2002ல் அஜீத் நடித்த வில்லன், பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் படங்கள் ரிலீஸ். இதுல அஜீத் தான் வின்னர். 2003ல் பிரசாந்த் நடித்த வின்னர், அஜீத் நடித்த ஆஞ்சநேயா. இதுல பிரசாந்த் தான் வின்னர். இதுல வடிவேலு காமெடி பட்டையைக் கிளப்பியது. 2005ல் பிரசாந்த் நடித்த லண்டன், அஜீத் நடித்த ஜி படங்கள் ரிலீஸ். இதுல பிரசாந்த் தான் வின்னர். 2006ல் அஜீத் நடித்த வரலாறு, பிரசாந்த் நடித்த ஜாம்பவான் ரிலீஸ். இதுல அஜீத் தான் வின்னர். இது 210 நாள்கள் ஓடியது.

அதே ஆண்டில் அஜீத் நடித்த ஆழ்வார், பிரசாந்த் நடித்த தகப்பன் சாமி, அடைக்கலம் படங்கள் ரிலீஸ். இதுல 3ம் பிளாப். 2015ல் அஜீத் நடித்த என்னை அறிந்தால், பிரசாந்த் நடித்த புலன் விசாரணை 2 ரிலீஸ். இதுல அஜீத் வின்னர். 2018ல் பிரசாந்த் நடித்த ஜானி, அஜீத் நடித்த விஸ்வாசம் ரிலீஸ். இதுல அஜீத் வின்னர்.

 

Related Articles

Next Story