
Cinema News
அஜித்தை போட்டியாக நினைத்து விஜய் செய்த காரியத்தை பாருங்க…! தளபதியின் தில்லாலங்கடி வேலை…
தமிழ் சினிமாவின் பலம் வாய்ந்த நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய். இவர்களின் படங்களின் ரிலீஸ் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போல தான் உணர்வை ஏற்படுத்தும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் வெடிகள் எல்லாம் போட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
அதற்கும் மேல் இவர்களின் ரசிகர்களுக்கு இருக்கும் போட்டி சில குடும்பங்களையே பாழாக்கி இருக்கிறது. அந்த அளவிற்கு தங்கள் தலைவனை கொண்டாடி வருகின்றனர். இதை பற்றி கேட்கும் போது நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம். நீங்கள் தயவுசெய்து சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள் என கூறி வந்தனர்.
இந்த நிலையில் வலைப்பேச்சு புகழ் பிஸ்மி அண்மையில் ஒரு செய்தியை தெரிவித்தார். ஒரு பத்திரிக்கையில் அந்த காலங்களில் இருந்து எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் என எழுதி வந்திருக்கின்றனர். இதை பார்த்த விஜய் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு போன் செய்து தனது கருத்தை தெரிவித்தாராம்.
அவர் கூறியதாவது உங்களது நாளிதழ்களை எல்லாம் படித்து வருகிறேன். ஆனால் அஜித் – விஜய் என அச்சிட்டுள்ளீர்கள். அதை விஜய் -அஜித் என திருத்தம் செய்து கொள்ளுங்கள் என கூறினாராம். அஜித்துடன் போட்டி இல்லாமலயா இப்படி சொல்வார் என பிஸ்மி தெரிவித்துள்ளார்.