Categories: Cinema News latest news

மீண்டும் விஜய் – அஜித் மோதிக்கொள்வார்களா…? இல்லை பின்னனியில் இருக்கும் அரசியல் நாடகம் பலிக்குமா..?

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை தன்னுள் வைத்திருக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். சமூக வலைதளங்களில் இவர்களுக்காக ரசிகர்களிடையே ஏற்படும் பிரச்சினைகள் ஒரு உலகப்போர் அளவிற்கு பூகம்பமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த போர் பூகம்பத்தையே கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வரும் பொங்கல் அன்று விஜயின் வாரிசு படமும் அஜித்தின் ஏகே-61 படமும் திரைக்கு ஒரே நாளில் வருவதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொண்டிருக்கின்றனர். இதற்கும் முன் தீனா-ஃபிரெண்ட்ஸ், திருமலை – ஆஞ்சனேயா, போக்கிரி-ஆழ்வார், வீரம்-ஜில்லா போன்ற படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆன விஜய் அஜித் படங்களாகும். ஆனால் அப்பொழுது இல்லாத ஒரு பரபரப்பு இன்று இருப்பதற்கு காரணம் அவர்கள் அடைந்துள்ள அசுரவளர்ச்சி தான்.

இதையும் படிங்கள் : விஜயையே மிரள வைத்த அருண் விஜய்…யாரிடம் இதை கூறினார் தெரியுமா?…

இந்த நிலையில் அஜித்தின் ஏகே-61 படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வாங்கியிருக்கிறதாம். அதே சமயம் வாரிசு படத்தை விநியோகஸ்தரர்கள் மூலமாக தியேட்டரில் வெளியிட அந்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் விநியோகம் மூலம் பார்த்தால் அஜித் படத்திற்கு தான் முன்னுரிமை இருப்பதாக தெரிகிறதாம்.

இதையும் படிங்கள் : மேடையில் தனுஷை வச்சி செய்த சிம்பு.?! உண்மையில் நடந்தது என்ன.?! ரசிகர்களின் நெகிழ்ச்சி செயல்…

அதே வேளையில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களும் வெளிவந்தால் ஏற்படும் பேரிழப்புகளை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது எனவும் கோடம்பாக்கத்தில் கவலைகொள்வதாக தெரிகிறது. மேலும் அதிக ரசிகர்களை கொண்டுள்ள விஜய்க்கு எதிராக உதயநிதி அஜித்தின் படத்தை வெளியிட்டால் இன்னும் இரண்டு வருடங்களில் சந்திக்கப் போகும் தேர்தலுக்கு ஏதாவது பின் விளைவுகள் வருமா எனவும் யோசித்து ஒரே நேரத்தில் வெளியிட அனுமதிப்பாரா? என்ற சந்தேகமும் இருந்து வருகிறதாம். ஆனால் விஜய்-அஜித் படங்கள் ஒன்றாக வந்தால் ரசிகர்களிடையே ஏற்படும் பிரச்சினையை யாராலும் தடுக்க முடியாது என கூறி வருகிறார்கள்.

Published by
Rohini