Connect with us
ajith

Cinema History

பல மாசம் ஆகியும் கிளைமேக்ஸ் வரல!.. காக்க வைத்த இயக்குனர்!.. தூக்கியெறிந்த அஜித்!..

சினிமாவில் திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியம். முழுக்கதையையும் தயார் செய்துவிட்டு படப்பிடிப்புக்கு செல்லும் இயக்குனர்கள் பலரும் இருக்கிறார்கள். என்ன எழுதினார்களோ அதை கச்சிதமாக எடுத்துவிடுவார்கள். பாலச்சந்தர், மணிரத்னம், பாரதிராஜா என பலரையும் உதாரணமாக சொல்லலாம். அதனால்தான், குறுகிய காலத்தில் அவர்கள் படங்களை வெளியிட முடிந்தது.

ஆனால், சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். கதையே இல்லாமல் படப்பிடிப்பை துவங்கி விடுவார்கள். சில காட்சிகளை எடுப்பார்கள். அதன்பின் ஒரு கதையை உருவாக்குவார்கள். சில இயக்குனர்கள் பாதி கதையை எழுதிவிட்டு படப்பிடிப்பிடிப்பு போவார்கள். அப்படி போவது எல்லா நேரமும் வொர்க் அவுட் ஆகாது.

இதையும் படிங்க: அஜித் ஃபேன்ஸை மிஞ்சிய தளபதியன்ஸ்… அதுவா? இதுவா? எதையாது சொல்லுங்களேன்பா… எக்ஸில் ஒரே ரவுசா கிடக்கு!

மின்னலே திரைப்படம் மூலம் இயக்குனரானவர் கௌதம் மேனன். அடுத்து அவர் இயக்கிய ‘காக்க காக்க’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். ஹாலிவுட் ஸ்டைலில் படமெடுக்கும் ஸ்டைலீஸான இயக்குனர் என பெயர் எடுத்தார். வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் என கவனம் ஈர்த்தார்.

அதோடு சரி. அதன்பின் அவர் இயக்கிய சில படங்கள் ரசிகர்களை கவரவில்லை. சிம்பு – திரிஷாவை வைத்து அவர் இயக்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா’ படம் மூலம் மீண்டும் பிரபலமானர். அதோடு சரி. அதன்பின் அவர் இயக்கிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இதில் சில படங்கள் இன்னமும் வெளியே வரவில்லை. விக்ரமை வைத்து அவர் இயக்கிய ‘துருவ நட்சத்திரம்’ படம் 4 வருடங்களாக பெட்டியில் தூங்குகிறது.

இதையும் படிங்க: எஸ்.ஜே சூர்யாவுக்கு அஜித் வாய்ப்பு கொடுத்த கதை தெரியுமா?!.. இவ்வளவு நடந்திருக்கா!..

இவரின் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தின் எல்லா காட்சிகளையும் எடுத்துவிட்ட கவுதம் மேனன் கிளைமேக்ஸ் காட்சியை மட்டும் எடுக்கவில்லை. ஏனெனில், என்ன கிளைமேக்ஸ் என அவருக்கே தோன்றவில்லை. இதற்காக அஜித் சில மாதங்கள் காத்திருந்தார்.

ஒருகட்டத்தில் கடுப்பான தயாரிப்பாளர் கவுதம் மேனனுக்கு அழுத்தம் கொடுக்க அவசர அவசரமாக ஒரு கிளைமேக்ஸ் காட்சியை எடுத்து படத்தை முடித்தார். அப்படி வெளியான அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடிக்கவில்லை. இப்படி ஒரு படமில்லை. சரியான திட்டமிடல் இல்லாமல் அவர் இயக்கிய சில படங்கள் தோல்வியை சந்தித்தது.

அந்த படத்திற்கு பின் கவுதம் மேனனுக்கு அஜித் கால்ஷீட்டே கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒருநாள் எல்லாரும் என்னை தேடி வருவாங்க!. அப்ப இருக்கு!.. சொன்னதை செய்து காட்டிய அஜித்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top