அஜித் ரீமேக் பண்ண சொன்ன படம்! ஆனா இயக்குனர் செஞ்ச வேலை.. ரிசல்ட் என்னாச்சு தெரியுமா?

ajith (1)
Ajith: தமிழ் சினிமா உலகில் இன்று பெரிய ஓப்பனிங் ஸ்டாராக இருப்பவர் நடிகர் அஜித்.எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனி ஆளாக இந்த திரைத்துறையில் கால் பதித்து தன்னுடைய சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் இன்று அனைவரும் அண்ணாந்து பார்க்கக் கூடிய இடத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் காதல் மன்னனாக இளசுகளின் மனம் கவர்ந்த அஜித் பின் ஆக்ஷன் ஹீரோவாக இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
அதிலிருந்து இன்றுவரை அவருக்கு ஒரு அசைக்க முடியாத வகையில் ரசிகர்கள் பலமாக இருக்கிறார்கள். இத்தனைக்கும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் வருவதில்லை. பேட்டிகளும் கொடுப்பதில்லை, பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதுமில்லை. ரசிகர் மன்றத்தையும் கலைத்து விட்டார். இப்படி இருந்தும் அஜித்துக்காக நாள்தோறும் உருகும் ரசிகர்கள் உருவாகி கொண்டேதான் இருக்கிறார்கள்.
சமீபத்தில்தான் அவருடைய நடிப்பில் குட் பேட் அக்லி படம் வெளியாகி பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக மாறியது. இதுவரை இல்லாத அஜித் படமாக இந்த படம் அமைந்தது. அதனால் ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தனர். முழுக்க முழுக்க ரசிகர்கள் படமாக இது அமைந்ததனால் 250 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் கௌதம் மேனன் அஜித்தை பற்றி கூறியது இப்போது சோசியல் மீடியாக்களில் வலம் வருகிறது.
என்னை அறிந்தால் படத்திற்கு முன்பு அஜித் கௌதம் மேனனிடம் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த ரேஸ் என்ற படத்தைத்தான் ரீமேக் செய்ய சொன்னாராம். இது ஹிந்தியில் வெளியான ஆக்ஷன் திரில்லர் படமாகும் .இதில் அனில் கபூர் மற்றும் சயிஃப் அலி கான் போன்றோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தைத்தான் அஜித் ரீமேக் செய்ய சொல்லியிருக்கிறார். ஆனால் அதற்குள் கௌதம் மேனன் என்னை அறிந்தால் படத்தின் கதையை சொல்ல உடனே ஓகே சொல்லிவிட்டாராம் அஜித்.

அப்படித்தான் என்னை அறிந்தால் படம் உருவாகியிருக்கிறது. ஆனால் என்னை அறிந்தால் படம் யாருமே எதிர்பார்க்காத ஒரு வெற்றி படமாக அமைந்தது. குறிப்பாக அருண் விஜய்க்கு அது கெரியர் தி பெஸ்ட் படமாகவும் டர்னிங் பாயிண்டாகவும் அமைந்தது. ஒரு வேளை மீண்டும் கௌதம் மேனன் அஜித் இணைந்தால் ரேஸ் படத்தின் ரீமேக் உருவாக வாய்ப்பு இருக்கிறது. எப்படியும் அஜித் இப்போது ரேஸில் ஆர்வமாக இருப்பதால் அக்டோபர் மாதம் வரை எந்தவொரு புதிய படத்திற்கான அறிவிப்பும் வெளியாகாது.