More
Categories: Cinema News latest news

என்னை வச்சி ஒரு படம் எடுங்க!… தல அஜித் கேட்ட இயக்குனர் யார் தெரியுமா?…

ஒரு சில இயக்குனர்கள் இருப்பார்கள். ஒரு படங்கள் அல்லது 2 படங்கள் மட்டுமே எடுத்திருப்பார்கள். ஆனால், அவர்களின் படங்களை பல வருடங்களுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பெருமையாக பேசுவார்கள்.

அப்படி ஒரு இயக்குனர்தான் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆரண்ய காண்டம். இப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் அவர் உருவாக்கிய திரைக்கதையும், காட்சிகளை அமைத்திருந்த விதமும் இயக்குனர்கள் பலரையும் கவர்ந்தது. ஒரு கேங்ஸ்டர் படத்தை அவ்வளவு விறுவிறுப்பாக இயக்கியிருந்தார். இப்படத்தில் சம்பத் ராஜ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

Advertising
Advertising

அதன்பின் 9 வருடங்கள் அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. 2019ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் என்கிற படத்தை இயக்கியினார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பஹத் பாசில், விஜய் சேதுபதி என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். இதற்காக அவர் தேசிய விருதும் பெற்றார்.

இந்நிலையில், நடிகர் அஜித் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்க விரும்பியது தற்போது தெரிய வந்துள்ளது. ஆரண்ய காண்டம் படத்தை பார்த்து மிகவும் அஜித்துக்கு பிடித்துப்போக ‘உங்கள் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விரும்புகிறேன். எனக்காக ஒரு கதை எழுதுங்கள்’ என அவர் கேட்க, உங்களுக்கு என்னிடம் கதை இல்லை. கதை எழுதினால் சொல்கிறேன் என தியாகராஜன் குமாரராஜா மறுத்துவிட்டார். இது நடந்து 11 வருடங்கள் ஆகிவிட்டது.

தற்போது அதற்கான நேரம் கணிந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்திற்காக தியாகராஜன் குமாரராஜா ஒரு கதையை உருவாக்கியுள்ளாராம். எனவே, இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறது என செய்திகள் கசிந்துள்ளது.

Published by
சிவா

Recent Posts