More
Categories: Cinema News latest news

மொத்த ப்ளானையும் மாற்றிய அஜித்!.. ஏக் தம்மில் சம்பவம் பண்ணப்போகும் ஏகே…

பொதுவாக பெரிய நடிகர்கள் ஒரு படம் முடிந்தவுடன் கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு அடுத்த படத்திற்கான கதையை தேர்வு செய்துவிட்டு படப்பிடிப்புக்கு போய்விடுவார்கள். ரஜினி, கமல், விஜய், விக்ரம், சூர்யா என எல்லோருமே அப்படித்தான். ஆனால், அஜித் இதற்கு நேர்மாறானவர். அவருக்கு எப்போது நடிக்க வேண்டும் என்கிற மூட் வருகிறதோ அப்போதுதான் நடிக்க போவார்.

அதுவரை அவருக்கு பிடித்தமான பைக் ஓட்டுவது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது என எதையாவது செய்து கொண்டிருப்பார். விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் படப்பிடிப்பு துவங்கவில்லை. ஜனவரி முதல் ஜூலை வரை இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் துவங்குகிறது, புனேவில் துங்குகிறது. ஹைதராபாத், குஜராத் என பல செய்திகள் வெளியானது.

Advertising
Advertising

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் விவகாரம்!.. கொந்தளித்த விஜய் பட இயக்குநர்… பஞ்சாயத்து முடிச்சி போச்சு கிளம்பு!..

 

ஆனால், இப்போதுவரை படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.ஒருபக்கம், அஜித் மீண்டும் பைக்கை எடுத்துக்கொண்டு வெளிநாடுகளில் ஓட்ட சென்றுவிட்டார். சமீபத்தில் அது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. எனவே, விடமுயற்சி துவங்கப்படுமா இல்லை டிராப் ஆகிவிடுமா என்கிற எண்ணம் கூட அஜித்தின் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. அவர்கள் சோர்ந்து போனார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் லண்டனில் நடத்தலாமா என அஜித் யோசித்து வருகிறாராம். அஜித் பைக்கில் ஊர் சுற்றுவதால் அதற்காக அந்த ஊரை அவர் தேர்ந்தெடுத்தாரா என்பது தெரியவில்லை. செப்டம்பர் 5ம் தேதி படப்பிடிப்பை துவங்கி தொடர்ச்சியாக 100 நாட்கள் நடத்தி படத்தையே முடித்துவிடலாம் என பேசி வருகிறார்களாம்.

ஒருபக்கம், இப்படத்திற்கு சரியான கதை கிடைக்காததால்தான் இத்தனை மாதம் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை என்று விபரம் அறிந்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

இதாவது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: விஜய் யாருன்னு தெரியுமா?.. ரஜினி சொன்ன கதைக்கு அப்பவே பதில் சொன்ன உலக நாயகன்..

Published by
சிவா

Recent Posts

  • Cinema News
  • latest news

மனைவியை பிரியும் ஜி.வி.பிரகாஷ்!. விரைவில் விவாகரத்து?.. அட போங்கப்பா!.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின்…

3 hours ago