அஜித்தின் முகத்தில் குத்திய பத்திரிக்கையாளர்.. பிரெஸ்மீட்டிங்கில் நடந்த களோபரம்!.. இதுதான் எல்லாத்துக்கும் காரணம்!.

by prabhanjani |   ( Updated:2023-07-22 06:31:26  )
அஜித்தின் முகத்தில் குத்திய பத்திரிக்கையாளர்.. பிரெஸ்மீட்டிங்கில் நடந்த களோபரம்!.. இதுதான் எல்லாத்துக்கும் காரணம்!.
X

நடிகர் அஜித், தான் நடிக்கும் படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும், ஆடியோ லாஞ்ச் விழாக்களிலும், அல்லது மற்ற நடிகர்களின் குடும் நிகழ்ச்சிகள் என்று எதிலும் பெரிதாக கலந்து கொள்ள மாட்டார். படம் நடித்து முடித்த பிறகு படத்தை விளம்பர படுத்த அஜித் எதுவுமே செய்யாமல் இருக்கிறார் என்று தயாரிப்பாளர்கள் சிலர் குற்றம் சாட்டிவருகின்றனர்.

ajithh

பத்திரிக்கையாளர்களை கூட அஜித் சந்திக்காமல் இருக்கிறார் அவர் ஒரு பந்தா பார்ட்டி என்றும் பலர் விமர்சித்து வரும் நிலையில் பத்திரிக்கையாளர் தஞ்சை அமலன், இதற்கான காரணங்களை விளக்கியுள்ளார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய தஞ்சை அமலன் அஜித் முன்பெல்லாம் எல்லா நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்துகொண்டு தான் இருந்தார். மேலும் அடிக்கடி பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து வந்தார்.

ajithkumar

சந்திக்கும் போதெல்லாம் மிகவும் அன்பாகவும், தன்மையாகவும் பேசுவார். ஒருமுறை அவரது திருமணம் முடிந்து பத்திரிக்கையாளர்களுக்கு பிரபல ஹோட்டல் ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் அஜித்தை கட்டிப்பிடித்த போது, அருகில் இருந்த பொருட்கள், தட்டுகள் எல்லாவற்றையும் தட்டி விட்டு சேதப்படுத்திவிட்டார். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

நடிகர் அஜித் படப்பிடிப்பில் என்றாவது ஒருநாள் அனைவருக்கும் அவரே பிரியாணி சமைத்து தருவார். அப்போது கூட மிகவும் சுத்தமாக, எங்கும் சிந்தாமல், நீட்டாக செய்யும் பழக்கம் உடையவர். அவருக்கு இதுபோன்ற செயல்கள் பிடிக்காது. அதன் பிறகு மெல்ல மெல்ல ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினர், செய்தியாளர்களை சந்திக்கும் போது, சிலர் மைக்கை முகத்திற்கு நேராக நீட்டி கேள்வி கேட்க வந்த போது, அவரது முகத்தில் குத்தி விட்டனர் என்று தஞ்சை அமலன் தெரிவித்துள்ளார்.

ajith kumar

இது போன்ற சம்பவங்களால் அவருக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதே பிடிக்காமல் போய்விட்டது. ரசிகர்கள் கூட படத்தை பார்த்துவிட்டு, போய் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் நினைப்பார். தனது ரசிகர்கள் தன் படத்தை பார்த்தால் மட்டுமே போதும், பேனர் வைப்பது, போஸ்டர் அடிப்பது என பணத்தை வீணாக்காமல், குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று கூறுவார். அதனால் தான் அவர் ரசிகர்களை கூட அவர் பார்ப்பதில்லை என்று தஞ்சை அமலன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க- குக்வித் கோமாளி சீசன் 4 டைட்டிலை அடிச்சி தூக்கிய பிரபலம்!.. CWC வரலாற்றில் முதன்முறையாக நடந்த சாதனை!…

Next Story