‘வாலி’க்கு அப்புறம் எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் கூட்டணி வைத்த அஜித்!.. எந்தப் படம் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் அஜித்தை ஒரு மாஸ் ஹீரோவாக முன்னனி ஹீரோவாக பிரகடனப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக அமைந்ததில் ‘வாலி’ படமும் ஒன்று. இந்தப் படத்தின் மூலம் தான் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக முதன் முதலில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தமிழ் திரையுலகில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தினார். ஒரு சார்மிங்கான நடிகரை கூட அழகான வில்லனாக காட்டமுடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் காட்டினார். யாரும் எதிர்பார்க்க முடியாத நடிப்பை அஜித் வாலி படத்தில் வெளிப்படுத்தினார்.
அந்தப் படத்தில் அஜித் எஸ்.ஜே.சூர்யாவிற்கு மிகவும் உதவிக்கரமாக இருந்திருக்கிறார். இதைப் பல மேடைகளில் எஸ்.ஜே.சூர்யா அஜித்தை பற்றி மிகவும் பெருமையாக கூறியிருக்கிறார்.மேலும் தமிழ் சினிமாவில் இரு பெரும் ஜாம்பவான்களான விஜய், அஜித்தின் கெரியரில் மிகவும் திருப்பு முனையாக அமைந்த படங்களை கொடுத்த பெருமை எஸ்.ஜே.சூர்யாவையே சேரும்.
இந்த நிலையில் மீண்டும் அவர்களை வைத்து மீண்டும் ஒரு தரமான சம்பவத்தை எப்பொழுது கொடுப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென இயக்குனர் பதவிக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிகராவதில் ஆர்வம் காட்டினார்.
முதன் முதலி ‘நியூ’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் எஸ்.ஜே.சூர்யா. அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். படம் பார்ப்பதற்கு ஒரு ஜாலியான கதைகளத்துடன் ரசிக்கும் படியாக இருக்கும். வெளியான முதல் வாரத்திலேயே மக்களுக்கும் பிடித்துப் போனது.
மேலும் ஒர் இயக்குனர் நடிகராக அறிமுகமாகும் படம் என்பதையும் தாண்டி கதைக்காக மக்கள் பெரும் சப்போர்ட்டை அந்தப் படத்திற்கு கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த நியூ படம் அஜித்திற்காக தயாரிக்கப்பட்ட
படமாம். அவர் தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக எஸ்.ஜே.சூர்யாவே படத்தை
இயக்கி நடித்திருப்பார்.
இதையும் படிங்க : ஆஸ்கர் வாங்குறதுக்கு ராஜமௌலி இவ்வளவு கோடி செலவழிச்சாரா?? என்னப்பா சொல்றீங்க?