படத்தை பார்த்து பாராட்டிய அஜித்!.. நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய ‘வாரிசு’ பட நடிகர்.. என்னடா நடக்குது?..
விஜய் நடிப்பில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படம் குடும்பக் கதையை அடிப்படையாக வைத்து வெளியான திரைப்படம். விஜயை நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு குடும்ப கதையில் பார்ப்பது இந்த படத்தின் மூலம் தான்.
விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருக்கிறார். விஜய்க்கு அண்ணனாக ஸ்ரீகாந்த், நடிகர் சியாம் போன்றோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் நடித்த சியாம் தொடர்ந்து பேட்டிகளில் தன் அனுபவத்தை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அளித்த பேட்டியில் அஜித்தை பற்றி கூறினார்.
இதையும் படிங்க : இக்கட்டான நிலையில் இருந்த இயக்குனர்!.. குடும்ப செலவுகளை ஏற்றுக் கொண்ட அஜித்!.. வலிகளை தாண்டி தல-யின் அந்த எண்ணம்..
அதாவது சியாம் முதன் முதலில் 12பி என்ற படத்தில் தான் அறிமுகமானார். இந்த படத்தை பார்த்து சிலிர்த்துப் போன அஜித் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘12பி படத்தை பார்த்து அசந்து போய்விட்டேன். சியாமிடம் போன் செய்து பேசவேண்டும் என நினைத்தேன், ஆனால் முடியவில்லை, பிரம்மாதமாக நடித்திருந்தார். முதல் படம் போன்றே தெரியவில்லை’ என்று சியாமை பற்றி அந்த பேட்டியில் கூறினாராம்.
இதை அறிந்த சியாம் அஜித்தை அவரின் படப்பிடிப்பிற்கே சென்று போய் பார்த்திருக்கிறார். அப்போதும் அஜித் சியாமிடம் முதல் படம் மாதிரியே தெரியவில்லை சியாம், ஏதோ 10 படங்களில் நடித்த அனுபவம் மாதிரி இருக்கு, நன்றாக பண்ணு என்று வாழ்த்தினாராம். மேலும் வழக்கம் போல சில அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார்.
இதையடுத்து சியாமின் திருமணத்திற்கு அஜித்தை அழைத்திருக்கிறார். அஜித் ஷாலினியுடன் வந்து சியாமை வாழ்த்திவிட்டு ஒரு மொபைல் போன் ஒன்றை பரிசாக அளித்தாராம். அதை இன்னும் நான் அப்படியே வைத்துள்ளேன் என்று சியாம் கூறினார்.