நான் வெயிட் போடுறதுக்கு காரணமே இதுதான்!.. அஜித் சொன்ன ரகசியம்.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் அஜித். இப்போது ஒட்டுமொத்த
ரசிகர்களையும் தன்னுள் அடக்கி கொண்டுள்ளார் அஜித். தன்னைத்தானே செதுக்கி கொண்டுள்ள அஜித் இன்று ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடும் நடிகராக இருந்து வருகிறார்.
ஆரம்பகாலங்களில் பார்ப்பதற்கு மிகவும் ஷார்மிங்காக சாக்லேட் பாயாக ஒரு காலேஜ் பாய் லுக்கில் இருப்பார் அஜித். அதன் காரணமாகவே இளம் பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக வலம் வந்தார், நாளை அஜித் அவரது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.
ஆனால் தற்சமயம் அஜித் நேபாளத்தில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். 8 ஆம் தேதி தான் சென்னைக்கே வருகிறாராம். மேலும் அவரின் ஏகே 62 படத்தின் தலைப்பும் இயக்குனரை பற்றிய அதிகாரப்பூர்வ தகவலும் நாளைதான் வெளியாக உள்ளதாம். அவர் சென்னை வந்த பிறகு தான் ஜூன் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு ஆர்ம்பமாக இருக்கிறதாம்.
இந்த நிலையில் அஜித்தின் உடலைமைப்பை பற்றிய ஒரு உண்மையை வலைப்பேச்சு பிஸ்மி கூறினார். அதாவது ஒரு சமயம் பிஸ்மி அஜித்துடன் நெருக்கமாக இருந்த நேரத்தில் ‘என்ன அஜித் தொழ தொழனு உடம்பு இருக்கே? குறைக்க கூடாதா?’ என கேட்டாராம்.
அதற்கு அஜித் ‘ஸ்பைனல் கார்டு பிரச்சினை இருப்பதால் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உண்கின்றாராம். அதில் அதிகமான ஸ்டீராய்டுகள் இருக்கிறதாம். அது அதிகமானால் உடம்பு வெயிட் போடுமாம்.’ என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு திருப்பதி மற்றும் பரமசிவம் போன்ற படங்களில் நடிக்கும் போது மிகவும் ஒல்லியாக இருப்பார்.
அதற்கு காரணம் உடம்பை குறைப்பதற்கான ஏதோ ஒரு பானம் குடித்தாராம். ஆனால் அது அவர் உடம்புக்கு செட் ஆகவில்லையாம், அதை அப்படியே விட்டதால் மறுபடியும் பருமன் அதிகமாகிவிட்டதாம். ஆனால் சென்னையில் படப்பிடிப்பு என்றால் மாலை படப்பிடிப்பு முடிந்ததும் நேராக அஜித் போவது ஜிம்மிற்கு மட்டும் தான் போவாராம். அது முடிந்ததும் வீட்டிற்கு போவாராம்.
இதையும் படிங்க :ஒழுக்கமா நடிச்சா தப்பா? சினிமா சரியில்லாம போயிடுச்சு!.. சர்ச்சை பதில் அளித்த தேவயானி!..