யார் சொல்லியும் கேட்காத அஜித் ஆதிக் சொல்லி கேட்டாரே! இதுதான் ஃபேன் பாய் சம்பவமா?
Ajith: ஒரு ஹீரோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறை பொதுவாக எல்லா மொழி சினிமாக்களிலும் இருக்கிறது. மிகவும் ஸ்டைலாக ஹேண்ட்ஸம் ஆன லுக்கில் அழகான ஹேர் ஸ்டைலுடன் ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற ஒரு வரைமுறை இருக்கிறது. ஆனால் அதை எல்லாவற்றையும் உடைத்து எறிந்தவர் நடிகர் அஜித்.
நரைத்த முடியுடன் நான் இப்படித்தான் இருப்பேன் என தான் நடிக்கும் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான லுக்கில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறார் அஜித். துணிவு, வலிமை போன்ற படங்களை எடுத்துக் கொண்டால் முழு நரைமுடி தலையுடன் தான் படங்களில் நடித்திருப்பார். ஆனால் அதையும் ரசிகர்கள் மிகவும் ரசித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: ரஜினியை கண்டெக்டராக காதலித்து நடிகராக்கிய காதலி… ஆனால் கடைசியில் நடந்தது தான் கொடுமை!…
அதைப் பற்றி சில செய்திகள் அஜித்தான் நான் இப்படித்தான் இருப்பேன். இதை மாற்றிக் கொள்ள முடியாது என சொல்வதாகவும் அதனாலயே இயக்குனர்கள் அவருடைய தோற்றத்தை மாற்றுவதில் தலையிடுவதில்லை என்றும் சில செய்திகள் வெளியானது. ஆனால் அந்த ஒரு ஸ்டைலை இப்போது அஜித் தனது அடுத்த படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் மாற்றப் போவதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது .
இந்த படத்தில் அஜித் மூன்று கெட்டப்களில் வருவதாக சொல்கிறார்கள். அதில் ஒரு கெட்டப் முழு கருநிற முடியுடன் அஜித் தோன்றுவார் என்றும் இன்னொரு கெட்டப் வரலாறு படத்தில் ஒரு வேடத்தில் வரும் அஜித் தன் முழு தலை முடியையும் ஏத்தி வாரிக் கொண்டு பின்பக்கம் ரப்பர் பேண்ட் போட்டு நடித்திருப்பார். அதே மாதிரியான லுக்கில் இந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் வரப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ‘சுந்தரி’ சீரியலுக்கு பிறகு கேபி எடுத்த அதிரடியான முடிவு! வாயடைத்துப் போன ரசிகர்கள்
அதனால் இது நாள் வரை அஜித்தை யாராலும் மாற்ற முடியாத இயக்குனர்கள் மத்தியில் ஆதிக் சொல்லி மாற்றி இருக்கிறார் என்றால் ஆதிக் மீது அஜித்திற்கு எவ்வளவு ஒரு மரியாதை இருக்கும் என இதிலிருந்தே தெரிகிறது. அதனால் இதுவரை யாரும் பார்த்திராத அஜித்தை இந்த படத்தின் மூலம் நாம் பார்க்க முடியும் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.