‘விடாமுயற்சி’யை கைவிடுகிறாரா அஜித்? - என்னதான் நடக்குது? குமுறும் கோடம்பாக்கம்

by Rohini |
ajith
X

ajith

கோலிவுட்டில் ஒரு முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். கடைசியாக அவர் நடித்த துணிவு படம் அனைவராலும் அதிகமாக கொண்டாடப்பட்டது. படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன் வெளியான வலிமை படம் அந்த அளவுக்கு வெற்றியை பதிவு செய்யவில்லை என்றாலும் துணிவு படத்தில் முற்றிலும் மாறுபட்ட அஜித்தை நம்மால் பார்க்க முடிந்தது.

அந்த குதூகலிப்போடு அடுத்த படமும் ஒரு வெற்றி படமாக அமையும் என அஜித்தும் எதிர்பார்த்திருப்பார், அதே சமயம் ரசிகர்களும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. ஏகே 62 படம் பற்றி பேச்சு எடுத்ததில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்த வண்ணம் இருந்தன.

ajith1

ajith1

பிப்ரவரியிலேயே ஆரம்பிக்க வேண்டிய படம் எப்படியோ தட்டு தடுமாறி சமீபத்தில் தான் படத்தின் தலைப்போடு பிள்ளையார் சுழியை போட்டனர். படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் என தகவல் வெளிவர ஆனால் அதுவும் இப்போது சற்று தள்ளிப் போய் ஜூன் இரண்டாம் வாரத்தில் என சொல்லப்பட்டது.

இதற்கிடையில் அஜித் கொஞ்சம் அப்செட்டாக இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள். அதற்கு காரணம் விடாமுயற்சி படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது என அனைவருக்கும் தெரியும். அந்த நிறுவனத்தை சமீபத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.

ajith2

ajith2

அதன் காரணமாகவும் அஜித் அப்செட்டாக இருக்கிறார் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்கள் கூட விடாமுயற்சி படத்தில் அஜித் நடிப்பது கூட சந்தேகம் தான் என்றும் கூறிவருகிறார்கள். இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கினால் தான் சரி வரும் என்றும் சொல்கிறார்கள். இல்லையென்றால் அவர்கள் சொன்னது உண்மை என்றாகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

Next Story