Connect with us

சினிமாவுக்கு அடுத்து அதுதான்!.. அஜித்தின் பல வருட ஆசை நிறைவேறுமா?!..

ajith

Cinema News

சினிமாவுக்கு அடுத்து அதுதான்!.. அஜித்தின் பல வருட ஆசை நிறைவேறுமா?!..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ஒரு சாதாரண மனிதராக சினிமாவில் அறிமுகமாகி எந்த ஒரு பெரிய சினிமா பின்னனியும் இல்லாமல் இன்று பல பேர் ஆச்சரியமாக பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவரின் விடா முயற்சியும் கடின உழைப்புமே முக்கிய காரணமாக இருக்கும்.

ஆரம்பகாலங்களில் ஏகப்பட்ட தோல்விகளை கண்ட அஜித் மனம் தளராமல் சினிமாவிற்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள போராடியிருக்கிறார். ஆனால் இந்த சினிமாவில் வந்ததே ஒரு விபத்து தான் என்று முன்னதாக அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் அஜித்.aja

சினிமாவில் நுழைந்ததற்கு அப்புறம் தான் எப்படியாவது நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் போராடி வந்திருக்கிறார். நடிக்க வருவதற்கு முன் ஒரு ஆட்டோ மொபைல் கடையில் வேலை பார்த்தாராம் அஜித். அவருக்கு கார், பைக் இவற்றின் மீது சிறு வயதில் இருந்தே ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறார்.

ajith1

ajith1

அதன் காரணமாக படிப்பில் மீது ஆர்வம் இல்லாத அஜித் ஆட்டொ மொபைல் கடையில் சேர்ந்து ஒர்க் ஷாப் இவற்றின் மீது ஆர்வமாக இருந்திருக்கிறார். ஆனால் தன் பையன் மெக்கானிக்காக இருப்பதை அவர்கள் பெற்றோர்கள் விரும்பவில்லையாம். அதன் பிறகு ஒரு அரசு சார்ந்த நிறுவனத்தில் மெக்கானிக் சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் வேலையில் சேர்ந்திருக்கிறார்.

இப்படி தன் கவனத்தை மெக்கானிக் சம்பந்தபட்ட வகையிலேயே கொண்டு போன அஜித்திற்கு அவர் சினிமாவில் வந்தது ஒரு விபத்து என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த பேட்டியில் ஒரு நாளைக்காவது நான் சொந்தமாக பிஸினஸ் ஆரம்பித்து அதன் மூலம் மெக்கானிக் பொருள்களை விற்பனை செய்யும் தொழிலை செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

ajith2

ajith2

ஒரு வேளை சினிமாவில் இன்னும் அவ்ளோதான் என்று எப்பொழுது அஜித் முடிவு எடுக்கிறாரோ அவரிடம் இருக்கும் அடுத்த அயுதம் அவர் ஆசைப்பட்ட அந்த ஷாப்பை வைப்பது தான் என்று அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டில் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க : அந்த நடிகர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்.. சொன்னது தனுஷ்.. இது எப்ப தெரியுமா?…

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top