சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்! அவர்களுக்கு அஜித் சொல்ல நினைப்பது..

by Rohini |   ( Updated:2025-05-01 07:24:28  )
vijay_aijth
X

vijay_aijth

Ajith: சமீப காலமாக சமூக வலைதளங்களில் அஜித் பற்றிய பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதுவும் பத்மபூஷன் விருது அவர் வாங்கிய பிறகு அவருடைய பர்சனல் விஷயங்கள் அவருக்கு பிடித்தவை அவருக்கு செய்ய விரும்புவது அவர் எப்படிப்பட்ட குணம் படைத்தவர் என பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அரசியலை பற்றியும் ஒரு கேள்விக்கு அஜித் பதில் சொல்லியிருக்கிறார். அதுதான் இப்போது ட்ரெண்டிங்காக இருக்கின்றது.

தான் உண்டு தன் வேலை உண்டு என இந்த சினிமா துறையில் இருப்பவர் நடிகர் அஜித். தனக்கு பிறகு தன் குடும்பம் தான் எல்லாமே என வாழ்ந்து கொண்டிருப்பவர். குடும்பம் குழந்தைகள் இவர்களுக்காகவே தன் முழு நேரத்தையும் செலவிட விரும்புபவர் .ஒரு பக்கம் ஷாலினி தனக்கு பக்த பலமாகவும் தன்னுடைய குழந்தைகள் தனக்கு உறுதுணையாகவும் இருக்கிறார்கள் என சொல்கிறார் அஜித்.

பத்மபூஷன் விருது வாங்கியதும் அங்குள்ள ஒரு ஆங்கில ஊடகத்தில் அஜித் பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொன்றாக பதில் கூறிய அஜித் அவருடைய மனைவி ஷாலினியை பற்றி பெருமிதமாக கூறியிருந்தார். இத்தனை கிரெடிட்டுக்கும் சொந்தக்காரர் ஷாலினி தான் என கூறியிருந்தார் அஜித் .ஏனெனில் திருமணத்திற்கு பிறகு அவர் எனக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்து இருக்கிறார்.

அவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது எல்லாவற்றையும் விட்டுவிட்டு எனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் மனைவி ஷாலினி. அதனால் அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என கூறியிருந்தார் அஜித். இந்த நிலையில் அவரிடம் உங்கள் துறைகளில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற ஒரு கேள்வியை கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அஜித் என்னுடைய துறையிலிருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு எந்த அரசியல் ஆசையும் இல்லை .அரசியலுக்கு வருவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என கூறி இருக்கிறார் அஜித். இந்த ஒரு பேட்டியை பார்த்த பிறகு விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்தை கூறி இருக்கிறார் அஜித் என சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் .

இன்னொரு பக்கம் அவருடைய நடிப்பில் குட்பேட்அக்லி திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது .அந்த படத்தில் விஜயின் ரெஃபரன்ஸும் இருந்தது. இதனால் இந்த படத்தின் மூலமாகவும் விஜய்க்கு மறைமுகமாக தன்னுடைய ஆதரவை அளித்திருக்கிறார் அஜித் என நெட்டிசன்கள் கூறிவந்த நிலையில் இப்போது இந்த ஒரு பேட்டியும் மிகவும் பாப்புலர் ஆகி வருகின்றது.

Next Story