Connect with us
Ajith22

Cinema News

அஜீத்துக்கு இனி அந்த விஷயம் எடுபடாது… ரசிகர்களை பத்திக் கொஞ்சம் கூட கவலை இல்லையே.. பிரபலம் விளாசல்

தமிழ்த்திரை உலகி;ல் தனக்கென தனி ஸ்டைலுடன் தல அஜீத்தாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தாலும் ரசிகர்களைப் பற்றிப் பெரிதாக அக்கறை கொள்ளாதவர் என்கிறார் பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தனன். வேறு என்னென்ன சொல்கிறார் என்று பார்ப்போமா….

இப்ப உள்ள காலகட்டத்துல அஜீத், விஜய், ரஜினி, கமல் நடிக்கிற படங்களுக்கு அவங்க கேட்குற சம்பளத்தைக் கொடுக்குற அளவுக்கு யாராவது தயாரிப்பாளர்கள் இருக்காங்களா? யாருமே இல்லை. கார்ப்பரேட் கம்பெனிகள் நினைச்சா தான் இவங்க கேட்குற சம்பளத்தைக் கொடுக்க முடியும் என்ற அளவில் நிலைமை மாறிப்போச்சு.

இதையும் படிங்க… விஜய் போட்ட பக்கா மாஸ்டர் ப்ளான்! SK நினைச்சது வேறு.. அங்கு நடந்தது வேறு

இன்னொன்னு ஆந்திராவில இருந்து தயாரிப்பாளர்கள களம் இறக்குவாங்க. அதுக்கே இங்க பயங்கரமா சண்டை எல்லாம் வந்துடுச்சு. நாங்க வளர்த்து விடுவோம். நீங்க யாருக்கோ சம்பாதிச்சிக் கொடுப்பிங்களான்னு வந்துட்டாங்க.

ஆர்ஆர்ஆர் தயாரிப்பாளர், மைத்ரி மூவி மேக்கர்ஸ், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (கன்னடம்) இப்படி நிறைய பேரு வர ஆரம்பிச்சிட்டாங்க. இவங்க கொடுக்கறது தான் பெரிய சம்பளமா இருக்கு. அதனால இனிமே அஜீத்தோட கொள்கைகள் எடுபடாது. கார்ப்பரேட்களை நோக்கித் தான் அவரும் போவாரு.

ஆதிக் ரவிச்சந்திரனோட குட் பேட் அக்லிக்கே 165 கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்காம். அடுத்த படத்துக்கு அவரு எவ்வளவு கேட்பாரு. நிச்சயமா சன் பிக்சர்ஸ் தான் படம் தயாரிக்க முடியும். அதனால தான் திரும்பவும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்துடன் படம் பண்ணலாம்னு பேசி இருக்காங்களாம்.

அவரு பக்கம் தான் சன்பிக்சர்ஸை வர வைப்பாரு. இவரு அங்கே போக மாட்டாரு. அஜீத்தைப் பொருத்த வரை அவரோட வசதியைத் தான் பார்ப்பாரு. ரசிகர்களை எல்லாம் பார்க்க மாட்டாரு. அதனால சிறுத்தை சிவா உடன் அவர் இணைந்து படம் எடுக்காதீங்கன்னு ரசிகர்கள் சொன்னாலும் அவர் எதையும் காதில் வாங்கவே இல்லை.

இதையும் படிங்க… சினிமா கத்துக்க மனுசன் என்னவெல்லாம் செஞ்சிருக்காரு!.. போராடி வெற்றி பெற்ற அயோத்தி பட இயக்குனர்…

அஜீத்தைப் பொருத்தவரை நைட் 12 மணிக்கு அவரு கூப்பிட்டாலும் போகுற டைரக்டர் சிறுத்தை சிவா தான். அதற்கு எச்.வினோத் உடன்படாதவர். அதனால் தான் இருவருக்கும் ஒத்துப்போகல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top