பீஸ்ட் புரோமோவில் இடம்பெற்ற அஜித்... டிரண்டாக்கும் ரசிகர்கள்...!
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் படம் குறித்த ஏதேனும் சிறிய அப்டேட்டாவது கிடைக்குமா என ரசிகர்கள் ஏங்கி வந்தனர். இந்நிலையில் தான் ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போல, பீஸ்ட் படத்தின் சிங்கிள் குறித்த அப்டேட் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டிருந்தது.
முன்னதாக டாக்டர் படத்திற்கு செய்தது போலவே பீஸ்ட் படத்திற்கும் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடலாசிரியரும் நடிகருமான சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்து, லூட்டி அடிக்கும் புரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
மேலும் யாரும் எதிர்பாராத வகையில் தளபதி விஜயும் இடையில் தொலைபேசி வாயிலாக பேசியிருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அரபி குத்து என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என புரோமோ வீடியோவின் கடைசியில், அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வீடியோவில் ரசிகர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கண்டுபிடித்து தற்போது டிரண்டாக்கி வருகிறார்கள். அதன்படி பீஸ்ட் பாடலின் இந்த புரோமோ வீடியோ, அனிருத் ஸ்டூடியோவில் வைத்து தான் எடுக்கப்பட்டிருந்தது. எனவே அனிருத் வாங்கியிருந்த விருதுகள் அவரின் பின்னால் இருந்துள்ளன.
அந்த விருதுகளுக்கு இடையே விவேகம் படத்திற்காக அனிருத் வாங்கிய விருதில், அஜித் புகைப்படம் இருப்பதை தான் ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து விஜய் படத்தின் புரோமோ வீடியோவில், அஜித் படம் மற்றும் விருதுகள் இடம்பெற்றுள்ளதால், ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகிறார்கள்.