Categories: latest news

வலிமை ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ரசிகர்கள் கொண்டாட்டம்!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியையடுத்து வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் நடித்துள்ள புதிய படம் வலிமை. இந்தப்படத்தில் ஹிந்தி நடிகை ஹீமா குரோஷி நாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வலிமை படம் இந்த மாதம் அதாவது, பிப்ரவரி 24ம் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அஜித் படம் ஏதும் வெளியாகாமல் சோகத்தில் இருந்த அஜித் ரசிகர்கள், போனி கபூரின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இப்படம் தமிழில் வெளியாகும் அதே நாளில் ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

 

Published by
Rohini