விஜய் படத்த மட்டும் காப்பினு சொல்றீங்க? அஜித்தோட இந்த படமும் காப்பி தான் தெரியுமா? பொங்கிய ரசிகர்கள்...!
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் அனைத்துமே இந்த கொரியன் படத்தின் காப்பி, இந்த சீன் அந்த படத்தில் இருந்து சுட்டது என அந்த படங்கள் வெளியான சமயத்தில் சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் பயங்கரமாக டிரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் ஒன்று காப்பி என கூறப்படுகிறது. அது வேற எந்த படமும் இல்லைங்க கடந்த 2019ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தாங்க. அப்பா மகள் இடையிலான பாசத்தை மையமாக வைத்து உருவான இப்படம் நல்ல வெற்றி பெற்றது.
சமீபத்தில் கூட இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தது. இந்நிலையில் இப்படம் ஒரு தெலுங்கு படத்தின் காப்பி என கூறப்படுகிறது. அதன்படி தெலுங்கில் கடந்த 2007ஆம் ஆண்டு வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான துளசி படத்தின் காப்பி தான் விஸ்வாசம் படம் என்கிறார்கள்.
இந்த படத்தின் கதைப்படி வெங்கடேஷ் நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்னர் வெங்கடேஷின் அடிதடி சண்டைகளை பார்த்து நயன்தாரா தனது குழந்தையுடன் வேறு ஒரு ஊருக்கு சென்று விடுகிறார். பின் தன் குழந்தை மற்றும் மனைவியை தேடி செல்லும் வெங்கடேஷ் அவர்களை சந்தித்து இறுதியில் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது தான் கதை.
இதே கதைதான் விஸ்வாசம் படத்தின் கதையும். இதை கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் எப்ப பார்த்தாலும் விஜய் தான் காப்பி படத்துல நடிக்கிறாருனு சொல்லுவீங்கல இப்போ பாருங்க அஜித்தும் காப்பி படத்துல தான் நடிச்சிருக்காரு என பேசி வருகின்றனர். ஆனால் அஜித் ரசிகர்களோ ஆயிரம் சொன்னாலும் விஸ்வாசம் வேற லெவல் தான் என பெருமை பேசி வருகிறார்கள்.