இறங்கி அடிக்க காத்திருக்கும் தல.. ‘துணிவு’ படத்தை உலகளவில் வெற்றி வாகை சூட்டுவதற்கு அஜித் போட்ட திட்டம்!.... ‘
பொங்கல் தினத்தன்று வருடந்தோறும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் பட்டிமன்ற தலைப்பில் துணிவு படத்திற்கு அதிக திரையரங்குகளா? வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகளா? என்ற தலைப்பிலேயே பட்டிமன்றத்தை நடத்திவிடலாம் போலிருக்கிறது.
அந்த அளவுக்கு இந்த இருபடங்களின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ஹார்ட் பீட்டை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சில தெரிந்த திரையுலகை சார்ந்த நண்பர்கள் இதற்கு முன் அஜித் இப்படி எல்லாம் முரண்டு பிடிக்க மாட்டார். ஆனால் இப்பொழுது நடிகர் என்ற ஒரு அந்தஸ்தை பெற்றதும் போட்டி என வந்ததும் விடுறதா இல்லை என்ற மனப்பாங்கில் வந்து விட்டார் என்று கூறுகின்றனர்.
அஜித்தின் துணிவு
ஆனாலும் இது நல்ல விஷயம் தான். போட்டினு வந்துட்டா ஒரு கை பார்த்து விடலாம் என்ற துணிவில் இருப்பதே நல்ல விஷயம் தான் என்று பல பேர் கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க வாரிசு படத்திற்கு விலங்கு நல வாரியத்திலிருந்து அண்மையில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விதிகளை மீறி யானைகளை படத்தில் பயன்படுத்தியதற்கு ஒரு வாரத்திற்குள் தக்க ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
மேலும் துணிவு மற்றும் வாரிசு படத்தை எத்தனை மணிக்காட்சிகளில் வெளியிடப்போகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. துணிவு படம் 1 மணி காட்சியிலும் வாரிசு படம் 4 மணிக்காட்சியிலும் வெளியிட இருக்கிறார்களாம். இதில் துணிவு படத்திற்கு தான் லாபம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் முதல் நாள் வசூல் எவ்வளவு என்று பார்க்கும் போது ஒரு நாளில் துணிவு படம் கூடுதல் காட்சியில் இடம்பெறும். வாரிசு படம் ஒரு காட்சி குறைவாகவே இடம் பெறும்.
வசூலில் வாரி இறைக்கும்
ஆதலால் துணிவு படத்திற்கு தான் அதிக வசுலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழ் நாட்டில் இந்த பிரச்சினை என்றால் உலக அரங்கிலும் துணிவு படம் வெற்றி வாகை சூட காத்துக் கொண்டிருக்கின்றது. அதாவது துணிவு படத்தை தமிழ் நாட்டில் திரையிட உதய நிதி எப்படி உரிமை வாங்கினாரோ அதே போல வெளிநாட்டில் திரையிட லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறதாம். அவருக்கு ஏகப்பட்ட செல்வாக்கு இருப்பதால் அதிக நாடுகளில் அதிக திரையரங்குகளில் துணிவு படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லைக்கா நிறுவனம்
மேலும் அஜித்தும் லைக்கா சுபாஸ்கரனும் ஏற்கெனவே நெருங்கி பழக்கூடிய அளவிற்கு அவர்களுக்கு ஒரு நட்பு இருக்கிறதாம். இன்னொரு கூடுதலான விஷயம் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறதாம். இதனால் கூட லைக்கா நிறுவனம் கைப்பற்றியிருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
மேலும் வாரிசு படத்தை வாங்கிய நிறுவனம் வெளிநாட்டில் ஏற்கெனவே கொடுக்கு வினியோகஸ்தரர்களுக்கு கொடுக்காமல் புதிய வினியோகஸ்தரர்களுக்கு தான் படத்தை பிரித்துக் கொடுக்கப்போகிறார்களாம். ஆகவே இதுவே துணிவு படத்திற்கு ஒரு ப்ளஸ் என்று கூறுகிறார்கள். எது எப்படியோ கதை நல்லா இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.