உயிரோடு இருக்குறதே பெரிய வரம்!.. ரொம்ப ஃபீல் பண்ணாத!.. அஜித் சொல்லும் தத்துவம்!…

by சிவா |   ( Updated:2025-05-02 01:13:57  )
ajith
X

அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார் அஜித். உண்மையில் இவர் அறிமுகமானது பிரேம புஸ்தகம் என்கிற தெலுங்கு படத்தில்தான். அதுதான் அஜித் நடித்த முதலும், கடைசியுமான தெலுங்கு படம். தமிழில் முதல் படம் அமராவதி. செல்வா இயக்கிய இந்த படம் அஜித்துக்கு நல்ல அறிமுக படமாக அமைந்தது.

அதன்பின் பல படங்களிலும் சாக்லேட் பாயாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். பைக் ரேசில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அஜித் அடிக்கடி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அப்போதெல்லாம் அவருக்கு பலமுறை அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது. காலில் பலமுறை அடிபட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

அப்படி மருத்துவமனையில் இருந்ததால் பல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் அஜித். அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதும் இல்லை. பலமுறை விழுந்து எழுந்தவர் என்பது அஜித்துக்கு நன்றாகவே பொருந்தும். அதேபோல், சினிமாவிலும் பல தோல்விகளை பார்த்திருக்கிறார்.

ajithkumar

எல்லாவற்றிலிருந்தும் மீண்டும் வந்து சினிமாவில் வெற்றி பெற்று மாஸ் நடிகராக மாறி இப்போது பத்மபூஷன் விருதையும் வாங்கியிருக்கிறார். அஜித்துக்கு கிடைத்திருக்கும் இந்த விருந்து அவரின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், அவரின் குடும்பத்தினர், அம்மா, சகோதரர்கள் என எல்லோருக்கும் சந்தோஷத்தையும், பெருமையையும் கொடுத்திருக்கிறது.

பத்மபூஷன் விருதை பெற்ற பின் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த அஜித் கடந்து வந்த பாதை பற்றி நிறைய பேசினார். குறிப்பாக வாழ்க்கையின் மீது சலித்துகொள்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவுரையை அவர் சொல்லியிருக்கிறார். வாழ்க்கையை பற்றி குறை சொல்பவர்களை பார்க்கிறேன். மறுநாள் காலை எழுந்ததும் உயிரோடு இருப்பது பெரிய வரம். நான் தத்துவார்த்தமாக பேச விரும்பவில்லை.

எனக்கு நிறைய காயங்கள், அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. எனக்கு புற்று நோயிலிருந்து தப்பிய குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் உள்ளார்கள். உயிரோடு இருப்பதே எவ்வளவு மதிப்பமிக்கது என்பது எனக்கு தெரியும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்’ என பேசியிருக்கிறார்.

Next Story