Categories: latest news

சிம்புவ பாத்து அசந்துபோன அஜித்!.. அப்படியே ஒரு அட்வைஸ்!.. மலேசியா அப்டேட்!…

மலேசியாவில் இருக்கும் அஜித்தை நடிகர் சிம்பு சந்தித்த புகைப்படங்களும், வீடியோக்களும் நேற்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. நடிகர் சிம்பு மற்ற நடிகர்களைப் போல கேப் விடாமல் தொடர்ந்து படங்களில் நடிக்கும் நடிகர் இல்லை. கடந்த பல வருடங்களாகவே அவரின் ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் இடையே நிறைய இடைவெளி ஏற்படுகிறது. அதோடு கெட்டப்பையும் தோற்றத்தையும் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறார். இதெல்லாம் மாறினாலும் அவரின் படம் என்னவோ வெளியாவது இல்லை.

அவரின் பத்து தல படம் ரிலீஸாகி இரண்டு வருடங்கள் கழித்து தக் லைப் படம் வந்தது. ஆனாலும் அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக் கொண்டது. அதன்பின் மூன்று புதிய படங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் சிம்பு. அதில் முதல் படமே டேக்ஆப் ஆகவில்லை. எனவே வெற்றிமாறன் கூப்பிட்டதால் அரசன் படத்தில் நடிக்கப் போனார். அதுவும் புரமோஷன் வீடியோவோடு நின்று போனது.

பல பஞ்சாயத்துகளுக்கு பின் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் துவங்கியிருக்கிறது. மலேசியாவிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்று இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார் சிம்பு. ஒருபக்கம், மலேசியாவில் ஒரு நகைக்கடை திறப்புவிழாவுக்கு போன சிம்பு ஏற்கனவே அங்கு கார் ரேஸுக்காக வந்திருத அஜித்தை சந்தித்து பேசியிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோக்கள் நேற்று இணையத்தில் வைரலானது. சிம்புவின் கெட்டப்பை பார்த்த அஜித் ‘இந்த லுக் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. இதையே மெயின்டெயின் பண்ணுங்க’ என்று சொன்னாராம். மேலும் ‘இடைவெளி விடாமல் தொடர்ந்து நிறைய படங்களில் நடியுங்கள்’ என்றும் அறிவுரை சொல்ல ‘சரி சார்’ என்று பவ்யமாக பதில் சொல்லியிருக்கிறார் சிம்பு.

Published by
சிவா