படம் ஹிட்டுன்னு ஆடாத!.. அடுத்த வேலைய பாரு!.. ஆதிக்குக்கு ஏகே சொன்ன அட்வைஸ்!…

Good bad ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் குட் பேட் அக்லி படம் ரசிகர்களுக்கு முழு திருப்தியை கொடுத்திருக்கிறது. அதுவும் அஜித்தை அவர்கள் எந்த படத்திலெல்லாம் அதிகம் ரசித்தார்களோ அந்த படத்தின் ரெப்ரன்ஸ் எல்லாமே குட் பேட் அக்லியில் இருக்கிறது. எனவே, இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.
எனவே, படம் பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் படத்தை பார்த்து வருகிறார்கள். இதனால், தினமும் வசூல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூன் தாஸும் நடித்திருந்தனர். இதுவரை சின்ன சின்ன வேடங்களில் நடித்துவந்த அர்ஜுன் தாஸுக்கு இந்த படத்தில் முக்கிய வில்லன் வேடம். அவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.

10ம் தேதி காலை முதல் காட்சி வெளியானதும் படத்தில் கதை இல்லை.. லாஜிக் இல்லை.. ஃபேமிலி ஆடியன்ஸ் வரமாட்டார்கள். படம் ஓடுமா தெரியவில்லை என சினிமா விமர்சகர்கள் பலரும் சொன்னார்கள். ஆனால், இரண்டாவது காட்சி வெளியானவுடன் மொத்த விமர்சனமும் மாறிப்போனது.
லாஜிக்கெல்லாம் பார்க்காமல் படம் பார்த்தால் நிச்சயம் பிடிக்கும்.. படம் முழுக்க அஜித்தை ரசிக்கும்படி காட்டியிருக்கிறார்கள்.. படம் சுவாரஸ்யமாக இருக்கிறது என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள். எனவே, படம் ஹிட் என்பது அப்போதே உறுதியாகிவிட்டது. முதல் நாளிலேயே இப்படம் தமிழகத்தில் 31 கோடி வசூல் செய்தது. அடுத்த நாள் அதை விட 2 மடங்கு வசூலானது. இப்போது படம் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 130 கோடி வசூலை தாண்டிவிட்டது.

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘படம் ஹிட் என தெரிந்தவுடன் அஜித் சாருக்கு போன் செய்தேன். ‘ஓகே படம் ஹிட் ஆயிடுச்சி.. படம் பிளாக் பஸ்டர்.. அவ்வளதான்.. அதை மறந்துவிடு. வெற்றியை உன் தலையில் ஏற்றிக்கொள்ளாதே. அதேபோல் தோல்வியை உன் வீட்டுக்கு எடுத்து செல்லாதே.. எல்லாத்தையும் விட்டுட்டு அடுத்த வேலையை பாரு’ என சொன்னார்’ என சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே ‘அஜித் சார் என்னை நம்பிய போது நான் ஒரு தோல்விப் பட இயக்குனராக இருந்தேன். ஆனால், என் மீது நம்பிக்கை வைத்து ‘நாம் இணைந்து படம் பண்ணுவோம்’ என நம்பிக்கை கொடுத்தார். அதேபோல் செய்தும் காட்டினார். அவரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. என்ன நம்பிய அவருக்கு நன்றி’ என ஆதிக் பேசியிருந்தார்.