Connect with us

பிஸ்னஸே இவ்ளோதான்.. சம்பளம் இவ்ளோ கேட்கலாமா?!.. ஐடியா இல்லாத அஜித்!….

ajith

latest news

பிஸ்னஸே இவ்ளோதான்.. சம்பளம் இவ்ளோ கேட்கலாமா?!.. ஐடியா இல்லாத அஜித்!….

திரையுலகில் சம்பளம் வாங்குவதில் இரண்டு வகையான நடிகர்கள் இருக்கிறார்கள்.. தன்னுடைய படங்கள் இந்த வசூலை பெறும்.. எனவே இவ்வளவு சம்பளம் வாங்கலாம் என சில நடிகர்கள் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், பல நடிகர்கள் தன்னுடைய படங்களுக்கான வியாபாரத்தை தெரிந்துகொள்ளாமலேயே ‘எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும்’ என அடம் பிடிப்பார்கள்.

அஜித்குமார் அதில் இரண்டாவது வகை. விடாமுயற்சி படத்தில் 100 கோடியும் குட் பேட் அக்லி படத்தில் 115 கோடியும் சம்பளம் வாங்கிய அஜித் இப்போது விஜய் சினிமாவை விட்டுபோய் விட்டதால் நம்மை விட்டால் ஆள் இல்லை என நினைத்தாரோ என்னவோ!.. தனது புதிய படத்திற்கு 185 கோடி சம்பளம் கேட்கிறார்..

ஆனால் இந்த சம்பளத்தை கொடுக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை.. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாவற்றையும் அணுகி அது நடக்காத நிலையில் மும்பை சென்று தயாரிப்பாளர்களை தேடினார்கள்.. அங்கும் அது நடக்கவில்லை
.. இறுதியாக படத்தை பென் மீடியா அல்லது ரிலையன்ஸ் நிறுவனம் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களும் அடிபட்டது.

ஆனால் அந்த நிறுவனங்கள் எல்லாமே தற்போது பின் வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதிலும் அஜித்துக்கு 100 கோடி சம்பளம் மற்றும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் என பேசி ஒப்புக்கொண்ட பென் மீடியா நிறுவனமும் இப்போது ஏதோ பிடிக்காமல் இதிலிருந்து பின் வாங்கி விட்டது..

அஜித் நடிக்கும் திரைப்படங்களின் வியாபாரம் என்பது 225 கோடி வரை மட்டுமே இருப்பதாகவும், அது புரியாமல் அஜித் 185 கோடி சம்பளம் கேட்டால் ஒரு தயாரிப்பாளர் எப்படி கொடுப்பார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்…

To Top