Connect with us

மே 1ம் தேதி ரிலீஸாகும் அஜித்தின் புதிய படம்!.. ஏகே ஃபேன்ஸ் கூட எதிர்பார்க்கலயே!…

ajith

latest news

மே 1ம் தேதி ரிலீஸாகும் அஜித்தின் புதிய படம்!.. ஏகே ஃபேன்ஸ் கூட எதிர்பார்க்கலயே!…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியானது. விடாமுயற்சி படம் அஜித்துக்கு ஹிட் கொடுக்காத நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது.. எனவே அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என அறிவிப்புகள் வெளியானது.. இதை அவரும் உறுதி செய்தார்..

ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகியும் அஜித்தின் புதிய படத்தின் ஷூட்டிங்.. இதுவரை தொடங்கப்படவில்லை.. இந்த இந்த வருடம் ஏப்ரல் 10 தேதியுடன் குட் பேட் அக்லி வெளியாகி ஒரு வருடம் முடிகிறது.
புதிய படத்திற்கு அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை என செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்நிலையில்தான், வருகிற மே 1 ம் தேதி அஜித்தின் பிறந்தநாளன்று அவரின் புதிய படம் ஒன்று வெளியாகிறது..

யாருக்குமே தெரியாமல் அப்படி என்ன படம் என்று யோசித்தால் அதற்கு பதில் இதுதான்.. அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான டாக்குமென்டரி படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் கடந்த சில மாதங்களாக உருவாக்கி வந்தார்.. ஒரு கட்டத்தில் இதை சினிமாவை போல உருவாக்கிவிட்டார்களாம். முதலில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டனர்.. ஆனால் இப்போது தியேட்டரிலேயே வெளியிடலாம் என்கிறதுக்கு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.. தற்போது இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் பின்னணி இசை அமைத்து வருகிறார்..

மேலும் சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன், யுவன் சங்கர் ராஜா, மாதவன், சிம்பு உள்ளிட்ட பலரும் அந்த படத்தில் அஜித்தை பற்றி பேசுவது போல காட்சிகளை எடுத்துள்ளனராம். எனவே அஜித்தின் புதிய படம் வெளியாகாத நிலையில் மே 1ஆம் தேதி அஜித்தின் கார் ரேஸ் தொடர்பான படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..

To Top