நீங்க இப்படி பண்லாமா!.. அஜித் மீது அப்செட்டில் ஃபேன்ஸ்.. ஒரே புலம்பல்ஸ்!..

X
நீங்க இப்படி பண்லாமா!.. அஜித் மீது அப்செட்டில் ஃபேன்ஸ்.. ஒரே புலம்பல்ஸ்!..

நடிகர்கள் அஜித்தும், விஜயும் சம காலத்தில் சினிமாவில் வழந்தவர்கள்தான். இருவருமே காதல் கதைகளில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோக்களாக மாறி அதன் பின் மாஸ் ஹீரோக்களாக மாறினார்கள். ரஜினி, கமல் ரசிகர்கள் எப்படி சண்டையிட்டுக் கொண்டார்களோ அதுபோலவே விஜய் – அஜித் ரசிகர்கள் சண்டை போட துவங்கினார்கள். அந்த சண்டை இப்போது வரை தொடர்கிறது.

விஜயும், அஜித்தும் கூட தங்களின் ரசிகர்களை தடுக்கவில்லை.. அஜித் மட்டும் ஒரே ஒரு முறை அறிக்கை வெளியிட்டார். ‘ஒருவரை புகழ்ந்து பேசுவதற்காக ஒருவரை மட்டம் தட்டி பேசாதீர்கள்’ என அறிக்கை விட்டார். ஆனால் அஜித் ரசிகர்கள் கேட்கவில்லை. சமூக வலைத்தளங்களில், குறிப்பாக டிவிட்டரில் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வது இப்போதும் தொடர்ந்து வருகிறது..

இந்நிலையில்தான், தமிழகத்திலேயே மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை உருவாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதற்கு, கடந்த பல வருடங்களாகவே மோட்டர் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டும் வரும் அஜித் குமார் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இது தீவிர அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.. நீங்கள் இப்படி செய்யலாமா?.. பல வருடங்களாகவே விஜய் ரசிகர்கள் உங்களை அப்படி திட்டிக் கொண்டிருந்தார்கள்.. விஜயே சில படங்களில் மறைமுகமாக உங்களை திட்டியிருக்கிறார்..

தற்போது ஒரு அறிவிப்பு வெளியானதும் அவரை இப்படி பாராட்ட வேண்டுமா.. நாங்கள் பல வருடங்களாக உங்களுக்காக இருக்கிறோம்.. பல வருடங்களாக விஜய் ரசிகர்களுடன் சண்டை போட்டு வருகிறோம்.. அப்படி என்ன விஜய் செய்துவிட்டார். நீங்கள் செய்ததில் நாங்கள் அப்செட் ஆகிவிட்டோம்’ என பதிவிட்டு வருகிறார்கள். சில தீவிர அஜித் ரசிகர்கள் இரு தொடர்பாக புலம்பி இன்ஸ்டாகிராமில் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்கள்.