உனக்கு ஆசை இருக்கலாம்… நான் அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது… அஜித்துக்கு நோ சொன்ன அப்பா!

by Akhilan |   ( Updated:2025-05-02 01:38:12  )
உனக்கு ஆசை இருக்கலாம்… நான் அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது… அஜித்துக்கு நோ சொன்ன அப்பா!
X

Ajithkumar: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தன்னுடைய தந்தை குறித்து சொல்லி இருக்கும் சில விஷயங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

கோலிவுட்டின் முன்னணி நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பை விட ரேஸிங் மீது தான் அதிக ஆர்வம் கொண்டவர். 1990களில், அஜித் கார் ரேஸிங்கில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். பின்னர், 1995-ல் பார்முலா 2 பிரிவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பங்கேற்றார்.

ஆனால், அதே சமயம் சினிமாவிலும் பிஸியாக இருந்ததால், ரேஸிங்கில் தொடர முடியாமல் போனது. இருந்தும் 2003ம் ஆண்டு ரேஸிங்கிற்காக ஒரு வருடம் முழுவதுமாக சினிமாவிலிருந்து ஓய்வெடுத்து, பார்முலா பிஎம்டபுள்யூ ஏசியா சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.

இதில் 2004ல், லேமன்ஸ் ஸ்போர்ட் ரேஸிங் லீக்கில் பங்கேற்றது அவரின் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இவர் இந்தியாவிலிருந்து உலகளவில் ரேஸ் செய்த மிக சிலருள் ஒருவராக இருந்து வருகிறார். அஜித் வெளிநாட்டு ரேஸிங் லைசன்ஸ் பெற்றவர்.

சமீபத்தில் ரேஸிங் குழு ஒன்றை உருவாக்கி அஜித் ரேஸிங் டீம் எனப் பெயரிட்டு இருக்கிறார். தற்போது அந்த டீமை வைத்துக்கொண்டு வருடத்தில் 6 மாதம் ரேஸிங் மீது கவனம் செலுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார். நிறைய விபத்துகள் நடந்து ஆபரேஷன் பல செய்தும் அந்த ஆர்வத்தை ஒருபோதும் விட்டுவைக்கவில்லை.

ரேஸிங் எனக்கு சினிமாவுக்குப் பிறகு இரண்டாவது உயிர் என அஜித்குமார் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் அஜித் ரேஸிங் பயணத்தின் தொடக்கத்தில் அவரை சந்தித்த மாடல் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் உங்களுக்கு மாடலின் மீது விருப்பம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என விசிட்டிங் கார்டு கொடுத்து சென்றாராம்.

அதைத் தொடர்ந்து சின்ன முயற்சி செய்யலாம் என அஜித் மீடியாவிற்குள் நுழைய அவருக்கு வாய்ப்புகள் வந்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஆரம்பத்தில் அவருக்கு வந்த மாடலிங், பிரிண்ட் விளம்பரங்கள், டிவி விளம்பரங்களின் சம்பளத்தினை ரேஸிங்கில் செலவு செய்து இருக்கிறார்.

அந்த நேரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரொம்பவே காஸ்ட்லியான விளையாட்டு என நினைத்த அஜித்தின் தந்தை உனக்கு நிதி உதவி செய்ய முடியாது என மறுத்திருக்கிறார். ஆனால் உன்னை நான் தடுக்கவும் மாட்டேன். மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது நீ எவ்வளவு ஆர்வமாக இருப்பது எனக்கு தெரியும். உன்னுடைய வழியை நீ தான் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் சொல்லியதாக அஜித் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story