சாப்பாடு பரிமாறிய பையனுக்கு அஜித் செய்த பெரிய உதவி!. ஏகே மனசு கோல்டுதான்!….

by சிவா |   ( Updated:2025-04-10 08:59:50  )
ajith
X

ajith

நடிகர் அஜித் எப்போதுமே தன்னை ஒரு பெரிய ஸ்டாராக நினைக்கமாட்டார். எல்லோரிடமும் மிகவும் எளிமையாக பழகுவார்.. பேசுவார்.. அதற்கு காரணம் சினிமா பின்னணியில் இருந்து அவர் சினிமாவுக்கு வரவில்லை. தங்க தட்டில் அவர் சாப்பிட்டு வளரவில்லை. முதல் படமான அமராவதி படத்தில் நடிக்க அவர் கேட்ட சம்பளம் ஒரு பைக் வாங்கும் தொகைதான்.

சினிமாவில் நிறைய கஷ்டங்களை, போட்டிகளை, அவமானங்களை பார்த்து வளர்ந்தவர் என்பதால் பலருக்கும் உதவ வேண்டும், பலரையும் தூக்கிவிட வேண்டும் என்கிற எண்ணம் அஜித்துக்கு இயற்கையாகவே வந்தது. அவர் சினிமாவில் கஷ்டப்பட்டு கொண்டிருந்த காலத்திலேயே சிலருக்கு படிப்பு மற்றும் மருத்துவ செலவுகளுக்கு கடன் வாங்கியெல்லாம் கொடுத்திருக்கிறார்.

அது அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும். வாலி படம் உருவான போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு அது முதல் படம். லப்பர் செருப்பு போட்டுக்கொண்டு பேருந்தில் வந்திருக்கிறார். என் இயக்குனர் இப்படி இருக்கக் கூடாது என சொல்லி அவருக்கு ஷூ மற்றும் பைக் வாங்கி கொடுத்தது அஜித். அந்த படம் ஹிட் அடித்ததும் அவருக்கு முதல் காரை வாங்கி கொடுத்ததும் அஜித்தான்.

Ajith-1
Ajith-1

அஜித்தை நிறைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தனது வெற்றியின் மூலம் பதில் சொன்னார் அஜித். இப்போது அவர் தொட்டிருக்கும் உயரம் கூட பலருக்கும் சொல்லும் பதில்தான். அவர் மீது எதிர்மறையான விமர்சனங்களையும் பலரும் சொன்னார்கள், சொல்கிறார்கள். ஆனால், அவர் யாருக்கும் எந்த பதிலும் சொல்வது இல்லை.

இந்நிலையில்தான் வலைப்பேச்சி அந்தனன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக வட மாநிலத்திற்கு சென்றிருந்தார் அஜித். மதிய உணவு இடைவெளியில் படப்பிடிப்பு குழுவினருக்கு ஒரு வடமாநில இளைஞன் உணவு பரிமாறியிருக்கிறான். அப்படி பரிமாறும்போது சாப்பாட்டை தட்டில் வைக்காமல் கொஞ்சம் தள்ளி தள்ளி கீழேவைத்திருக்கிறான். சாப்பிட உட்கார்ந்திருந்த அனைவருக்கும் அவன் அப்படியே செய்ய எல்லோரும் அவனிடம் கோபப்பட்டிருக்கிறார்கள்.

இதை அஜித் கவனித்திருக்கிறார். தனக்கும் அந்த இளைஞன் அப்படிய செய்ய பொறுமையாக அஜித் ‘உனக்கு கண்ணில் என்னப்பா பிரச்சனை?. தட்டு தெரியவில்லையா?’ என கேட்க, அந்த இளைஞனோ ‘ஆமாம் சார் எனக்கு தெரியவில்லை’ என சொல்லியிருக்கிறார். அங்கு ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பும்போது அந்த இளைஞரை சென்னைக்கு அழைத்து வந்து ஒரு கண் மருத்துவரிடம் அனுப்பி பரிசோதனை செய்ய சொல்லியிருக்கிறார்.

கண்ணை பரிசோதித்த மருத்துவர் ‘கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 5 லட்சம் செலவாகும். 10 நாட்கள் கண்ணில் மருந்து விட்டு அவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என அதற்கான ஏற்பாடுகளை செய்த அஜித் அந்த இளைஞருக்கு சொந்த செலவில் அறுவை சிகிச்சை செய்து ஒருவரை வைத்து 10 நாட்கள் அவருக்கு மருந்துகளை கொடுத்து அவரது கண்ணை சரி செய்து அதன்பின் அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

Next Story