விடாமுயற்சி ஷூட்டிங் நின்னதுக்கு காரணமே அஜித்தான்!. அட என்னப்பா சொல்றீங்க!...

by சிவா |
ajith
X

ajith

அது என்னவோ!.. சிம்பு படம் என்றாலே பஞ்சாயத்து என்பது போல அஜித் படம் என்றால் துவங்குவது முதல், படப்பிடிப்பு நடப்பது மற்றும் படம் முடியும் வரை தாமதம் என்கிற நிலை உருவாகி விட்டது. வலிமை படம் 2 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கப்பட்டது. அதற்கு கொரோனா ஊரடங்கு ஒரு காரணம் என்றாலும் வேறு சில காரணங்களும் இருந்தது. அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டே ஓய்ந்து போனார்கள். இப்போது அவர்களுக்கே இது பழகிவிட்டது.

அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது என்பது தொழில் மட்டுமே. சினிமாவில் நடிப்பதை விட பைக்கை எடுத்துக்கொண்டு ஊரை சுற்றுவதில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டு. அதனால்தான் அவர் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஷூட்டிங் இல்லையென்றால் உடனே தனது பைக் கேங்கை கூட்டிகொண்டு எங்கேயாவது போய்விடுவார்.

இதையும் படிங்க: ஹைதராபாத் ரோட் சிக்னலில் சாகசம் செய்யும் அஜித்! வைரலாகும் வீடியோ.. தல வேற லெவல்

விஜயின் வாரிசு படம் வெளியான போது தனது துணிவு படத்தை போட்டியாக களம் இறக்கினார் அஜித். அதில் வெற்றியையும் அவர் பார்த்தார். வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து அது ரிலீஸ் ஆகி, அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடிக்க துவங்கி, தனக்கான காட்சிகளை முடித்து கொடுத்துவிட்டார் விஜய்.

ஆனால், துணிவு படத்திற்கு பின் துவங்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி படம் இப்போது வரை முடிந்தபாடில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் துவங்கி 6 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. பனிப்புயல், மழை என பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டதாக சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: நைட்டு 12 மணிக்கு இயக்குனரின் வீட்டுக்கு போய் வாய்ப்பு கேட்ட அஜித்!. இவரா இப்போ இப்படி மாறிட்டாரு!.

மேலும், ஒரே நேரத்தில் விடாமுயற்சி, வேட்டையன் என பெரிய நடிகர்களின் படங்களை லைக்கா நிறுவனம் தயாரித்ததால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதாகவும் அதனால்தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது.

அசர்பைசான் நாட்டில் படப்பிடிப்பை நடத்த சொன்னதே அஜித்தான். அங்கு ஒரு நாள் படப்பிடிப்பு நடத்துவதற்கான செலவே பல லட்சம். அப்படி இருக்கும்போது சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுமாறு லைக்கா தரப்பில் கேட்க ‘அதெல்லாம் முடியாது’ என சொல்லிவிட்டாராம் அஜித். அதனால்தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒருவழியாக இந்த மாத இறுதியில் அசர்பைசான் நாட்டில் கடைசிக்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

Next Story