என்னது லியோ ஃபேக்கா? அஜித் வாழ்க்கை ஸ்டோரியே இங்க Fakeஆ இருக்கே… வைரல் வீடியோ!...
Ajithkumar: தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் பொய்யா இருக்கலாம். ஆனால் ஒரு பிரபலத்தின் வாழ்க்கையே பொய்யா இருந்தா? அஜித் ரசிகர்களுக்கான ஷாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட தஞ்சாவூரை சேர்ந்த தந்தைக்கும், சிந்தி தாயுக்கும் மகனாக பிறந்தவர் அஜித். இவருக்கு ஒரு அண்ணனும், தம்பியும் உள்ளனர். 10வது படிக்கும் போது அஜித் தன் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டார். என்பீல்ட் கம்பெனியில் ஆறு மாத இண்டர்ன்ஷிப்புடன் மெக்கானிக்காக இவருக்கு வேலை கிடைத்தது.
இதையும் படிங்க: கூலி டீசர் வீடியோவில் லோகேஷ் செஞ்ச வேலைய கவனிச்சீங்களா?!.. அட இது தெரியாம போச்சே!…
ஆனால் அவர் தந்தைக்கு இதில் உடன்பாடு இல்லையாம். அவருக்கு அஜித் வொயிட் காலர் வேலையில் இருக்க வேண்டும் என்றே விரும்பினாராம். இதனால் மெக்கானிக் வேலையை விட்டு தந்தையின் நண்பர் கம்பெனியில் கார்மெண்ட் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார்.
அதன்பின், அந்த வேலையைவிட்டு நண்பர்களுடன் இணைந்து ஒரு டெக்ஸ்டைல் பிசினஸை தொடங்கினார். அந்த நேரத்தில் தான் மாடலிங் செய்து கொண்டு இருக்கும் போது அஜித்துக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனால் நடிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்க தன்னுடைய கவனத்தினை படத்தின் பக்கம் திருப்பினார்.
இதையும் படிங்க:ராதிகா கர்ப்பத்தால் மனம் உடைந்து போன பாக்கியா… இருக்கும் தானே!… ஆனா?
அஜித் மெக்கானிக்காக வாழ்க்கையை தொடங்கியதால் அவர் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அஜித்தின் அண்ணன் அமெரிக்காவில் வேலை பார்த்ததாகவும், தம்பி அமெரிக்காவில் படித்ததாகவும் அஜித்தே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அப்போ மெக்கானிக்கா போனது அவருக்கு படிப்பு வராம தானா?
லியோ கதை ஃபேக்குனா சொன்னீங்க? இங்க பாருங்கப்பா அஜித்தின் வாழ்க்கையே ஃபேக்கா இருக்கு. கஷ்டத்தால் நடந்தது இல்லையா என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கமும், தல நீங்க சும்மா இருங்க. உங்களுக்கு எதுவும் தெரியாது என அஜித் ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அஜித்குமார் பேட்டியை காண: https://www.instagram.com/reel/C3tzwIARl85