ஒன்னு இல்ல இரண்டு… அஜித்தின் அடுத்த ப்ளான் இதான்… ஆனா இவ்வளோ ஸ்பீடா?
Ajithkumar: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றும் கசிந்திருக்கிறது.
துணிவு படத்தை முடித்துக் கொண்ட நடிகர் அஜித்குமார் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை தொடங்காமல் உலகப்பயணம் மேற்கொண்டார். ஆனால் படத்தின் பெயர் விடாமுயற்சியின் அறிவிக்கப்பட்டது. இயக்குனர் தேர்விலும் சில கோளாறுகள் நடந்தது. பின்னர் மகிழ்திருமேனி இப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ‘கொடி’க்கு பிறகு மீண்டும் வில்லியாக களமிறங்கும் திரிஷா! யார் ஹீரோனு தெரியுமா?
மிகப்பெரிய இடைவேளைக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் விடாமுயற்சி சூட்டிங் அஜித்குமார் கலந்து கொண்டார். அஜர்பைஜானில் நடந்த அப்படத்தின் ஷூட்டிங் பலமுறை தள்ளிப் போக லைக்கா நிறுவனம் தன்னுடைய அடுத்த படங்களின் வெளியீட்டிற்காக அப்படத்தின் படப்பிடிப்பை பல நாட்கள் நிறுத்தி வைத்திருந்தது.
இதனால் ஒப்புக்கொண்ட படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என நடிகர் அஜித் உடனே குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்தார். இந்நிலையில் மீண்டும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்க ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் சூட்டிங்கிலும் கலந்து கொண்டார். இந்த வேலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கப் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
இதையும் படிங்க: அந்த படம் பிரசாந்துக்கு சொன்னது… மொக்க காரணத்தால் மிஸ்ஸான அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்..
இப்படத்தின் சூட்டிங் 40 சதவீதம் முடிந்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹைதராபாத்தில் நடந்து வரும் ஷூட்டிங் இன்னும் இரண்டு தினங்களில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் விரைவில் தொடங்கப்பட இருக்கும் எனவும் தகவல்கள் கசிந்திருக்கிறது.
இப்படத்தை அடுத்த ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் வெளியிட பட குழு முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆறு மாத இடைவெளியில் முதல்முறையாக அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி இருப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.