தாஜ்மகால் பாட்டை கேட்டு கெட்ட வார்த்தையில் திட்டினார் அஜித்!. மனோஜ் பகிர்ந்த நினைவுகள்!..

Published On: March 26, 2025
| Posted By : சிவா
ajithkumar

Manoj Bharathiraja: இயக்குனரும், நடிகருமான பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று திடீரென மரணமடைந்த செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் உலுக்கி இருக்கிறது. ஏனெனில், அவர் உடல் பாதிக்கப்பட்டிருப்பதாக கூட சமீபத்தில் எந்த செய்திகளும் வரவில்லை. அப்பா பாரதிராஜாவை பத்திரமாக கவனித்து வந்தவர் மனோஜ்தான். வயது மூப்பில் கொஞ்சம் தள்ளாடும் பாரதிராஜாவை தாங்கி பிடித்துக்கொண்டிருந்தவரும் அவர்தான்.

அதனால்தான் மகன் மனோஜின் மரணம் பாரதிராஜாவை நிலைகுலைய வைத்திருக்கிறது. பாரதிராஜா போன்ற ஒரு மகா கலைஞனுக்கு இப்படி ஒரு சோகத்தை காலம் கொடுத்திருக்கக் கூடாது. ஆனால், காலம் இரக்கமற்றது என சொல்வார்கள். பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு புத்திர சோகத்தை கொடுத்து விட்டது. யாருடைய ஆறுதலாலும் அவரின் மனதை தேற்ற முடியாது என்பதே நிஜம்.

manoj
#image_title

Born with silver spoon ஆக பிறந்தவர்தான் மனோஜ். தாஜ்மகால் படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்தார் பாரதிராஜா. இந்த படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தாலும் படம் ஓடவில்லை. அதற்கு முக்கிய காரணம் மனோஜை ஹீரோவாக ரசிகர்கள் ஏற்கவில்லை. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து பார்த்தார் மனோஜ். ஆனால் எடுபடவில்லை.

பல புதிய நடிகர்களை அறிமுகம் செய்து மகனை ஒரு வெற்றி பெற்ற ஹீரோவாக மாற்ற முடியவில்லையே என்கிற வலி பாரதிராஜாவுக்கும், சினிமாவில் நம்மால் வெற்றி பெற முடியவில்லையே என்கிற வலி மனோஜுக்கும் பல வருடங்களாகவே இருக்கிறது. சரி இயக்குனராக மாறுவோம் என சொல்லி மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கினார் மனோஜ். இதில் அப்பா பாரதிராஜாவையும் நடிக்க வைத்தார். ஆனால், படம் ஓடவில்லை.

manoj
#image_title

 

எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில்தான் அவரின் மரணம் நேர்ந்திருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று மாலை 6.30 மணியளவில் மாரடைப்பில் மனோஜ் உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில், மனோஜ் சில வருடங்களுக்கு முனபு பேசிய வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

தாஜ்மகால் படத்தின் என் அறிமுக பாடலான ‘திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா’ பாடலை அஜித் சாருக்கு போட்டு காட்டினேன். பாடலை கேட்டுவிட்டு ஒரு கெட்டவார்த்தையில் திட்டிவிட்டு ‘நாங்கலாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வறோம். உனக்கெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கில் இப்படி ஓப்பனிங் சாங். தங்க தட்டுல வச்சி தூக்கி கொடுக்குறாங்க. நீயெல்லாம் அதிர்ஷ்டசாலிடா’ என ஜாலியாக திட்டிவிட்டு எனக்கு வாழ்த்து சொன்னார்’ என மனோஜ் கூறியிருந்தார்.