Cinema News
விஜயிடம் போனில் பேசிய அஜித்!.. தளபதியிடம் தல சொன்னதுதான் ஹலைட்!….
Ajith Vijay: சினிமா நடிகர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. வெளியே போட்டி நடிகர்களாக இருப்பார்கள். தனது போட்டி நடிகரின் படத்தை நமது படம் காலி செய்ய வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், நேரில் சந்தித்துகொண்டால் தங்களுக்குள் எந்த போட்டியும் இல்லை என்பது போல நடந்துகொள்வார்கள்.
இருவரும் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொள்வார்கள். இது எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் இருந்து இருக்கிறது. அதன்பின் ரஜினி – கமல் இருவரும் போட்டி நடிகர்களாக மாறினார்கள். அவர்களுக்கு பின் விஜய் – அஜித் மோதல் வந்தது. அவர்கள் இருவர்களின் ரசிகர்களும் சண்டை போட்டு கொள்வார்கள். இப்போது அந்த சண்டை சமூகவலைத்தளங்களில் எதிரொலித்து வருகிறது.
இதையும் படிங்க: கோட் படத்தின் ஹைலைட்டே அதுதான்! நீளமெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. பிரசாந்த் சொல்றத கேளுங்க
குறிப்பாக விஜய் – அஜித் ரசிகர்கள் மிகவும் கடுமையாக மோதிக்கொள்கிறார்கள். விஜய் ரசிகர்களை அஜித் ரசிகர்கள் அனில் குஞ்சுகள் எனவும், விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை ஆமை குஞ்சுகள் என்றெல்லாம் சொல்லி கிண்டலடித்து கொள்கிறார்கள். ஒருவரை பாராட்டுவதற்காக மற்றொருவரை திட்ட வேண்டாம் என அஜித் அறிக்கை வெளியிட்டும் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை.
விஜய் இப்போது சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது.
இதையும் படிங்க: நயன் – விக்கி திருமண வீடியோ வராம போனதுக்கு காரணமே தனுஷ்தானாம்!.. என்னாப்பா சொல்றீங்க!..
அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை எடுத்த வெங்கட்பிரபு கோட் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். கோட் பட கதையை அஜித்திடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். அப்போது ‘விஜய்க்கு பொருத்தமாக இருக்கும். மங்காத்தாவ விட 100 மடங்கு சிறப்பா இருக்கணும்’ என வாழ்த்து சொன்னாராம் அஜித்.
இந்நிலையில், சமீபத்தில் அஜித்தை வெங்கட்பிரபு சந்தித்தபோது அவரின் போன் மூலம் விஜயிடம் பேசியிருக்கிறார் அஜித். அப்போது ‘உங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்கள்.. நீங்கள் அடுத்தடுத்து எப்படி செயல்பட போகிறீர்கள் என பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என விஜயிடம் சொன்னாராம அஜித்.