விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. ஏகே 62 படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட லைக்கா நிறுவனம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் அஜித்தின் அடுத்த படத்தின் அப்டேட்டை காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏகே 62 படத்தைப் பற்றிய பேச்சு எழுந்ததிலிருந்து சில பல தடங்கல்கள் வந்து கொண்டே இருந்தன. முதலில் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது.
அதன் பின் அவருடைய ஸ்கிரிப்ட் பிரச்சினை காரணமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்காவிற்கு எந்தவித திருப்தியும் இல்லை.
அதனால் விக்னேஷ்சிவன் இந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டார். ஆனாலும் படப்பிடிப்பு ஆரம்பிப்பதில் சில சறுக்கல்கள் இருந்தன. மேலும் அஜித்தின் தந்தை சமீபத்தில் காலமானதால் சிறிது நாட்கள் இடைவெளி விடப்பட்டிருந்தது.
மேலும் விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து விலகிய பின் இயக்குனர் மகிழ் திருமேனி ஏ கே 62 படத்தை இயக்குவதாக சில பல தகவல்கள் வெளியானது. ஆனால் அதைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தன.
இந்த நிலையில் இன்று அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடுகிற சமயத்தில் ஏகே 62 படத்தின் தலைப்பையும் படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறார் என்பதையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதாக இருந்தது.
சொன்ன மாதிரியே நள்ளிரவு அஜித்தின் பிறந்தநாள் அன்று லைக்கா நிறுவனம் படத்தின் தலைப்பையும் படத்தை மகிழ்திருமேனி தான் இயக்குகிறார் என்பதையும் அதிகாரபூர்வமாக தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். படத்தின் தலைப்பிற்கு 'விடா முயற்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜித்தின் சமீபகால படங்கள் எல்லாமே v என்ற எழுத்தில்தான் ஆரம்பித்திருக்கின்றன. படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார்.