ஏகே 62 இவ்ளோ கோடி பட்ஜெட்டா?.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைக்கப் போகும் அஜித்..
பொறுத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு செமயான விருந்து ஒன்றை வைக்க காத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகி விட்டது. அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தான் மகிழ் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.
அதற்காக தன்னுடைய உதவியாளர்களுடன் ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கி எந்த விதமான தொந்தரவும் இல்லாமல் கதை எழுதுவதில் கவனமாக செயல்பட்டு வருகிறாராம் மகிழ். அஜித்தும் முழு ஸ்கிரிப்டை எழுதிக் கொண்டு வாருங்கள், அதன் பின் எத்தனை நாள் கால்ஷீட் வேண்டுமென்றாலும் தருகிறேன் என்றும் கூறியிருக்கிறாராம்.
மற்ற படங்களின் படப்பிடிப்புகள் போல் இல்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித் எந்த வித பைக் சுற்றுப் பயணமும் மேற்கொள்ளப்போவது இல்லையாம். தன்னுடைய முழு ஈடுபாட்டினை வழங்க இருக்கிறாராம். அதே போல் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் படத்திற்கான லொக்கேஷன், வெளியூர் லொக்கேஷன் போன்றவைகளை தேர்வு செய்யும் வேலைகளில் இருக்கிறதாம்.
துணிவு படத்தின் வெளி நாடு உரிமையை லைக்கா வாங்கி அஜித்தை ஓவர் சீஸ் முழுவதும் பிரபலப்படுத்தியது. அதே போல் இந்தப் படத்திலும் ஒரு பெரிய முனைப்பை காட்ட இருக்கிறதாம். மேலும் லியோ படத்தை போலவே ஏகே 62 படத்திற்கும் ஒரு புரோமோ வீடியோ ஒன்றை ஏற்பாடு செய்யப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளதாம்.
ஏனெனில் ஏகே 62 படத்தின் அப்டேட் படம் வெளியாகும் வரையில் மக்கள் மனதில் நிற்க வேண்டுமாம். அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய தீவிரம் காட்டிவருகின்றனர் படக்குழு. மேலும் அஜித்தும் முதலில் ஸ்கிரிப்ட் வரட்டும். அதன் பிறகு வில்லன், கதா நாயகி என மற்ற வேலைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம்.
இதையெல்லாம் தாண்டி படத்திற்கான பட்ஜெட்டையும் லைக்கா திட்டமிட்டு விட்டதாம். கிட்டத்தட்ட பொன்னியின் செல்வன் படத்திற்கான பட்ஜெட்டையும் தாண்டி ஏகே 62 படத்தின் பட்ஜெட் கண்டிப்பாக இருக்கும் என சொல்கிறார்களாம். படத்தை தரமாக கொடுக்க ஒட்டுமொத்த படக்குழுவும் முழு மூச்சாக இறங்கி விட்டனர். இதெல்லாம் சரி ஆன பிறகு தான் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவார்களாம். இந்த செய்தியை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படிங்க : நயனும் சிம்புவும் சேர்ந்து செய்த சில்மிஷம்!.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த தயாரிப்பாளர்..