‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’! இதே பெருமைக்குரிய அந்த கால பாடல் எதுனு தெரியுமா?

by Rohini |   ( Updated:2024-02-14 06:55:44  )
ajith
X

ajith

Amarkalam: அஜித் நடிப்பில் ஒரு மாஸ் கிரியேட் செய்த படம் என்றால் அது அமர்க்களம் திரைப்படம்தான். சரண் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில்தான் அஜித்தும் ஷாலினியும் முதன் முதலில் இணைந்தார்கள். இந்தப் படத்திற்கு பிறகு அவர்கள் இருவரிடம் நெருக்கம் அதிகமாகி காதலாகி கடைசியில் திருமணத்திலும் இணைந்தார்கள்.

ஒரு லோக்கல் ரவுடியாக அஜித் இந்தப் படத்தில் மாஸ் காட்டியிருப்பார். இந்தப் படத்திற்கு முன்புவரை ஒரு காதல் மன்னனாகவே பார்த்த அஜித்தை இந்தப் படத்தில் பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்க முடிந்தது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்காக சென்சாரையே ஏமாற்றி பாடல் எழுதிய வாலி!.. கவிஞர் செம கில்லாடிதான்!..

படம் மட்டுமில்லாமல் படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும் குறிப்பாக ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடலை மூச்சுவிடாமல் பாடி சாதனை படைத்திருப்பார் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். வெறி கொண்டு பாடியதை போல் அஜித்தும் இந்த பாடல் காட்சியில் சிறப்பாக நடித்திருப்பார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடலில் கேட்டேன் என்ற வார்த்தை மட்டும் 83 முறை வந்திருக்கிறதே? இதை போல ஒரே வார்த்தை திரும்ப திரும்ப அதிகம் முறை வந்த பாடல் எதுவும் இருக்கிறதா? என சித்ரா லட்சுமணனிடம் கேட்டார்.

இதையும் படிங்க: கூடவே இருந்து கட்சித்தாவிய நடிகை! கலைஞர் சொன்ன அந்த வார்த்தை – உண்மையிலேயே பெரிய மனுஷன்தான்

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் ‘அந்த காலத்தில் வெளியான வீர அபிமன்யூ என்ற படத்தில் பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத் துடித்தேன் என்ற பாடலில் தேன் என்ற வார்த்தை பாடல் முழுக்க வந்திருக்கிறது.’

‘தமிழ் சினிமாவில் ஒரே வார்த்தை அதிகம் முறை வந்த முதல் பாடல் இந்த பாடல்தான்’ என பதில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க; பெரிய ஆப்பா வைக்க போறாங்க போலயே… முத்துக்கு தான் எப்பையும் பிரச்னை கொடுப்பீங்கப்பா…

Next Story