நள்ளிரவில் வீட்டில் இருந்து கிளம்பும் அஜித்... எதுக்கு போறாருனு தெரியுமா?

Ajith Kumar
அஜித் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் சிக்காமல் பிரைவேட் வாழ்க்கையை வாழவே விரும்புவர். இதை பல இடங்களில் சொல்லியும் இருக்கிறார். அதற்கு அவர் சில விதிகளையும் வைத்து பாலோ செய்து வந்தாராம்.
அஜித் அடிப்படையில் தமிழ் குடும்பத்தினை சேர்ந்தவர் இல்லை. இதனால் தமிழ் பேசுவது அவருக்கு ஆரம்பகாலங்களில் மிகவும் பிரச்சனையாகவே இருந்ததாம். இதற்காக படப்பிடிப்பு நடக்கும் போதே உதவி இயக்குனர்களிடம் அதன் சரியான உச்சரிப்பை கேட்டு மனப்பாடம் செய்து கொள்வாராம். தொடர்ந்து தனது வசனங்களும் தமிழில் இருப்பதையே விரும்புவாராம்.

அஜித்
இதுமட்டுமல்லாமல், அஜித் எப்போதும் டப்பிங்கை அதிகாலையில் தான் வைத்து கொள்வாராம். வீட்டில் இருந்து 2 மணிக்கு கிளம்பி சென்று விடுவார். 3 மணிக்கு டப்பிங் ஸ்டுடியோ சென்று தனது படங்களுக்கு டப்பிங் பேசுவாராம். தொடர்ந்து 8 மணி வரை டப்பிங் பேசிவிட்டு வீடு திரும்பவதையே வழக்கமாக வைத்திருக்கிறாராம்.
இது ரசிகர்கள் கண்ணில் படாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கிறதாம். பொது இடங்களில் ரசிகர்களிடம் கண்ணில் படும்போது அது சுற்றி இருப்பவர்களுக்கும் தொந்தரவாக இருப்பதை அஜித் விரும்புவது இல்லையாம். ஆனால் இனி இதற்கும் பிரச்சனை இல்லையாம்.

Ajith Kumar
காரணம், அஜித் தனது திருவான்மியூர் வீட்டில் புதிதாக ஒரு டப்பிங் ஸ்டூடியோவையும் அமைத்துவிட்டார். இனி மற்ற படங்களுக்கு அங்கையே டப்பிங் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.