Categories: Cinema News Entertainment News latest news

Good Bad Ugly: படைத்த புதிய சாதனை… தளபதிய பின்னுக்குத் தள்ளிட்டாரப்பா!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

துணிவு படத்திற்கு பிறகு அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா கஸான்டிரா நடித்து வருகின்றனர்.

லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சிக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். தற்போது பட்ஜெட் பிரச்சினையால் இப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் யாரும் எதிர்பாராவிதமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மே 1௦-ம் தேதி அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா பிறந்தநாளில் தொடங்கியது.

 

இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் அஜித் மூன்று வேடங்களில் பச்சை கலர் பூப்போட்ட சட்டையுடன் இருந்தார்.

இதுவரை வெளியான பர்ஸ்ட் லுக்குகளில் இதுதான் மிகவும் மோசமாக இருக்கிறது என, அஜித் ரசிகர்களே சமூக வலைதளங்களில் கலாய்க்கும் அளவிற்கு தான் பர்ஸ்ட் லுக் உள்ளது.

இந்தநிலையில் குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அதாவது ட்விட்டரில் இந்த பர்ஸ்ட் லுக்கை 41 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதனை தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பெரிதாக எந்தவித புரமோஷனும் செய்யப்படாமல் வெளியான பர்ஸ்ட் லுக்கினை சுமார் நான்கு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

GOAT, கங்குவா, இந்தியன் 2, வேட்டையன், தங்கலான் உட்பட இதுவரை வேறு எந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ட்விட்டரில் இவ்வளவு பார்வைகளைப் பெற்றதில்லை என்பதால், இந்த சாதனை அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

Published by
manju