வதந்திக்குனு ஒரு அளவு வேணாமாடா? அஜித் லைன் அப்பில் இருக்கிறது இதுதான்..என்னெல்லாம் உருட்டுராங்க

Actor Ajith: அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ் போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

படத்திற்கு இசை அனிருத். முழு மூச்சுடன் நடைபெற்று வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜானில் நடந்து வருவதால் அங்கு தற்போது நிலவி வரும் காலநிலை ஏற்புடையதாக இல்லையாம்.

இதையும் படிங்க: அவ்ளோ புரமோஷன் பண்ணியும் இவ்ளோதான் வசூலா?.. சிங்கப்பூர் சலூன் நிலைமை இப்படி ஆகிடுச்சே?..

கடுங்குளிர், பனி என இங்கு இருந்து போன நம் ஆள்களுக்கு அது செட்டாக வில்லை. அதனால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என படக்குழு மொத்தமும் சென்னை திரும்புவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அஜித் திரும்புவாரா இல்லை துபாயில் அவருக்கு சொந்தமாக வீடு இருப்பதால் அங்கேயே தங்கியிருப்பாரா என தெரியவில்லை.

இந்த நிலையில் அஜித் விடாமுயற்சி படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இது அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு கண்டிப்பாக மார்ச் மாதத்தில் இருந்து ஆரம்பித்து விடுவார்கள் என வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: வாரணம் ஆயிரம் படத்துல முதல்ல இந்த ஹீரோயின் தான் நடிச்சாங்களா!.. அய்யோ ஏன் மிஸ் ஆகிடுச்சு?..

அதற்கு அடுத்தப் படியாக சிறுத்தை சிவாவுடன்தான் அஜித் நடிக்க இருக்கிறாராம். சிறுத்தை சிவா இப்போது கங்குவா படத்தில் பிஸியாக இருப்பதால் அந்தப் படத்தை முடித்த கையோடு மீண்டும் அஜித்துடன் கைகோர்க்கிறாராம் சிறுத்தை சிவா. அதனால் வெற்றிமாறனோ அல்லது பிரசாந்த் நீலோ அஜித்தின் லைன் அப்பில் இல்லை என வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.

 

Related Articles

Next Story