தனுஷின் டைரக்டஷனில் நடிக்கும் அஜித் மகள்..! அதுவும் இந்த கேரக்டரிலா? ஆச்சரியம் தான்!
Dhanush: தனுஷ் திடீரென எடுத்து இருக்கும் முடிவு அவர் ரசிகர்களையே ஆச்சரியப்பட வைத்து இருக்கிறது. தொடர்ந்து ஷூட்டிங் சென்று கொண்டு இருப்பவர். கிடைக்கும் கேப்பில் தற்போது ஒரு படத்தினை இயக்க இருக்கிறாராம். தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் பொங்கல் ரிலீஸாக வெளியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் ஒரு சின்ன கேப்பை தன்னுடைய நடிப்பு உலகத்திற்கு விட இருக்காராம். அதாவது அவரின் டைரக்ஷன் திறமையை காட்ட இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷின் இயக்கத்தில் உருவாக இந்த திரைப்படம் பக்கா கேங்ஸ்டர் படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. தனுஷ் எழுதி, இயக்கும் இப்படத்தினை கலாநிதி மாறன் தயாரிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: அடுத்த வருஷம் ராகவா லாரன்ஸுக்கு செம ட்ரீட் தான் போலயே.. எல்லாமே மாஸ் டைரக்டர்கள்..!
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் சமீபத்தில் தான் முடிந்தது. இப்படத்தில் தனுஷும் நடித்து இருக்கிறார். இப்படம் முடிந்த கையோடு தனுஷ் தற்போது அடுத்த பட டைரக்ஷன் வேலைகளில் இறங்கி விட்டாராம்.
இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி நடத்தலாம் என்ற ஐடியாவில் தனுஷ் இருக்கிறாராம். இதில் அனிகா, சரத்குமார் காட்சிகள் படமாக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். ஃபைட் க்ளப் லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் எப்பையுமே தர்மர் தான்… சம்பளத்தை கூட கண்டுக்க மாட்டார்.. டைரக்டர் சொன்ன ஆச்சரிய தகவல்..!