அஜித் மேல் எந்தளவுக்கு பாசம் இருந்தா இப்படி பண்ணுவாங்க? திருச்சியில் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
Actor Ajith: கோலிவுட்டின் கிங் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இழுபறியுடன் படம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையிலும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் இதுவரை வெளிவரவில்லை. படத்தின் டைட்டிலை தவிற வேறெந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லைக்காவின் தயாரிப்பில் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதற்கிடையில் சமீபகாலமாக அஜித்தை பற்றி பல செய்திகள் ரசிகர்களுக்கு வேதனையை அளித்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் அவர் கண்டுகொள்வதாக இல்லை.
இதையும் படிங்க: முத்துவை மாட்டிவிட்ட ரோகினி… அவரு உங்களை மாட்டிவிட்டா நிலைமை மோசம் ஆகுமே?
அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருக்கிறார் அஜித். ஆனால் இப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்புபவர். நான் நடிக்கிறேன். என் தொழில் இதுதான். படத்தை பார்த்து சந்தோஷப்படுங்கள். அவ்ளோதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள பந்தம்.
அதைவிட்டு பாலாபிஷேகம் செய்வது, கட் அவுட் வைத்து கொண்டாடுவது, போஸ்டர் ஒட்டுவது என ஏன் உங்கள் சொந்த காசை போட்டு வீணாக்குகிறீர்கள் என்ற மன நிலையில்தான் அவருக்குண்டான ரசிகர் மன்றத்தை கலைத்தார்.
இதையும் படிங்க: கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா இருந்தா எப்படிடா?.. ஜோஷ்வாவை பொளந்த ப்ளூ சட்டை மாறன்!..
தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் ஏகே என்று அழைத்தால் போதும் என்றும் பணிவுடன் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அஜித். அவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருந்தாலும் அவருக்காக உருகும் ரசிகர்களை ஒரு முறையாவது வந்து சந்திக்கலாமே என்றுதான் பல விமர்சகர்கள் கூறிவருகிறார்கள். இந்த நிலையில் இன்று அஜித்தின் செல்லமகனான ஆத்விக்கின் பிறந்த நாள்.
அதனால் ஆத்விக்கின் புகைப்படம், வீடியோக்களை பதிவிட்டு அஜித்தின் மகனையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியில் அஜித் நற்பணி மன்றம் என்ற பெயரில் அறம் மகிழ் அறக்கட்டளையில் முதியோர்களுக்கு காலை உணவை வழங்கி தங்களது அன்பையும் அக்கறையையும் தெரிவித்திருக்கிறார்கள். இதாவது அஜித் கவனத்திற்கு செல்ல வாய்ப்பிருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: பார்த்து விழுந்துடப் போகுது!.. கல்யாணமாகியும் கன்ட்ரோல் இல்லாம திரியும் கியாரா அத்வானி!..