விடாமுயற்சி-னுதான் பேரு.. முயற்சிலாம் வீணா போகுது!.. இப்போதைக்கு வாய்ப்பில்ல! எடுடா பைக்க!
இந்த வருடம் அஜித்திற்கு போதாத காலமாக இருக்கும் போல. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்வார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். துணிவு படத்தில் முற்றிலும் மாறுபட்ட அஜித்தை பார்க்க முடிந்தது. அதனாலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பு அடுத்தப் படத்திற்கும் இருந்தது.
முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த ஏகே 62 எப்படிபட்ட சிக்கலை சந்தித்தது என அனைவருக்கும் தெரியும். அந்தப் பிரச்சினை ஓய்வதற்குள் அஜித் பைக் ரைடு சென்றுவிட்டார். எவ்ளவோ போராடியும் விக்னேஷ் சிவன் அஜித் படத்திற்குள் நுழைய முடியவில்லை. லைக்கா நிறுவனம் ஒரேடியாக மறுத்து விட்டது. அதன் பிறகு அஜித் படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி பல மாதங்களாக எழுப்பப்பட்டது.
அதன்பிறகே மகிழ் திருமேனி உள்ளே வந்தார். அவருக்கும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கபட்டது. கதையை எழுதுவதற்கு அவரும் நேரம் எடுத்துக் கொண்டார். இதற்கிடையில் அஜித்தின் தந்தை மரணம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. இப்படி பல பிரச்சினைகள் அஜித்தின் படத்தை பின் தொடர்ந்து வந்தன.
பிப்ரவரியில் ஆரம்பிக்க வேண்டிய படப்பிடிப்பு மே மாதம் ஆகியும் இன்னும் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றன. ஒரு வழியாக படத்தின் தலைப்பையாவது அறிவித்தார்கள். இந்த நிலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடித்து விட்டு 8 ஆம் தேதி தான் அஜித் சென்னைக்கு வந்திருக்கிறார்.
ஜூன் 22 ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என கூறினார்கள். ஆனால் அதற்கும் இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். ஏனெனில் சமீபத்தில் தான் லைக்கா நிறுவனம் சம்பந்தப்பட்ட பல இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.
கிட்டத்தட்ட 4 நாள்கள் ரெய்டு நடத்தியதால் லைக்கா நிறுவனம் கொஞ்சம் மன வருத்ததில் இருக்கும் என சொல்கிறார்கள்.அஜித்தின் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிப்பதால் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும் என கூறியிருக்கிறார்கள். இதில் அதிகமாக பயப்படுகிற விஷயம் என்னவென்றால் இந்த இடைப்பட்ட காலத்திற்குள் அஜித் மீண்டும் பைக் எடுத்து சுற்ற போயிருவாரோ என்றுதான் பயப்படுகிறார்கள்.
இதையும் படிங்க : ரகசியம் காத்த ‘லால்சலாம்’ படக்குழு – கபில்தேவ் செஞ்ச வேலை – தர்மசங்கடத்தில் ரஜினி