ஜோதிகாவை தொடர்ந்து மீண்டும் வந்த ஷாலினி அஜித்குமார்... வெளிவந்த சுவாரஸ்ய தகவல்
தமிழ் நடிகைகள் சிலர் திருமணம் முடிந்து ரசிகர்கள் கண்ணில் படாமல் தனிப்பட்ட வாழ்க்கையில் பிஸியாகி விடுவர். ஒரு சிலர் தான் எதுவும் ஒரு வகையில் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுப்பார்கள். அந்த வகையில் ஷாலினி அஜித்குமார் தற்போது மீண்டும் வந்திருக்கிறார்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கியவர் ஷாலினி. ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த எல்லா படங்களிலுமே ஷாலினி நடித்து இருக்கிறார். மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் குழந்தை நட்சத்திமாக கலக்கி இருக்கிறார்.
பின்னர் படிப்பை முடித்து விட்டு மீண்டும் நடிப்புலகிற்கு நாயகியாக எண்ட்ரி கொடுத்தார். மலையாளத்தில் வெளியான அனியாத்திபிரவு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் வசூல் சாதனையை தொடர்ந்து அப்படத்தினை தமிழில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அதில் விஜய் மற்றும் ஷாலினி இணைந்து நடித்திருந்தனர்.
இந்த ஹிட் ஜோடியை வைத்து ஃபாசிலே கண்ணுக்குள் நிலவு என்ற பெயரில் மீண்டும் ஒரு படத்தினை இயக்கி இருந்தார். தொடர்ந்து தமிழில் ஹிட் நாயகியாக இருந்த ஷாலினிக்கு படையப்பா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
தொடர்ந்து, சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் அஜித்துடன் ஜோடி போட்டார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இயக்குனர் சரணே இவர்கள் காதலுக்கு பல முறை தூது போன தகவல்களை கூட அவர் தனது பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
2000ம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து, சினிமாவில் நடிப்பதை ஷாலினி நிறுத்திக்கொண்டார். தொடர்ந்து, அஜித்தை போல அவர் எந்த சமூக வலைத்தளங்களில் இல்லை. அவ்வப்போது எதும் சினிமா நிகழ்ச்சி, ப்ரீமியர் ஷோக்களில் அவரை காண முடிந்தது.
இந்நிலையில், முதல்முறையாக ஷாலினி இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கிறார். வெகுசமீபத்தில் தான் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் எண்ட்ரி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.