ஷாலினிதான் என நம்பி ஏமாந்த பிரபலங்கள், என்ன நடந்தது தெரியுமா?

by Rohini |
shalini
X

நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். சின்ன வயதிலேயே இவர் தனக்கென ரசிகர்களை சேகரித்து வைத்திருந்தார்.

shalini1

தொடர்ந்து, நாயகியாக காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். படம் பெரிய வரவேற்பை பெற்றாலும், ஷாலினி தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை. அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காதலால், 2000ம் ஆண்டு அஜித்தை திருமணம் செய்துகொண்டு நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.

அஜித்தும் சரி, ஷாலினியும் சரி சமூக வலைத்தளங்களில் பெரிதாக ஆர்வம் காட்டிக்கொள்வதில்லை. இந்நிலையில் நடிகை ஷாலினி நேற்று டுவிட்டரில் கணக்கு தொடங்கி கணவர், அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பக்கிளர்ந்துள்ளார். டுவிட்டரில் கணக்கு தொடங்கிய ஷாலினிக்கு பிரபலங்கள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

shalini2

ஷாலினி டுவிட்டர் கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களில், நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமாருக்கு ட்விட்டர் கணக்குகள் எதுவும் இல்லை; அவரது பெயரில் போலியாக கணக்கு செயல்பட்டுவருகிறது என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் கொடுத்துள்ளார்.

Next Story