அருண் விஜய்க்கு பின் அர்ஜூன் தாஸ்!.. அஜித் முடிவு பண்ணிட்டா அவங்களுக்கு செம லைப்!…

by சிவா |   ( Updated:2025-04-11 10:01:19  )
arjun das
X

சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபத்தில் கிடைத்துவிடாது. சிலர் பல வருடங்கள் போராடுவார்கள். ஆனால் சரியான வாய்ப்பு அமையவே அமையாது. சிலருக்காவது நல்ல வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் மேலே போவார்கள். பலருக்கும் அந்த வாய்ப்பு கடைசி வரை கிடைக்காமலேயே போய்விடும். அப்படி வாய்ப்பே கிடைக்காமல் சினிமாவை விட்டே போனவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். அருண் குமார் என்கிற பெயரில் 1995ம் வருடம் சுந்தர் சி இயக்கிய முறை மாப்பிள்ளை என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினர். தொடர்ந்து பல வருடங்கள்.. பல படங்களிலும் நடித்தார். நன்றாக நடனம் ஆடுவார்.. ஆக்சன் காட்சிகளில் நன்றாக நடிப்பார்.. ஆனாலும் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

அப்போதுதான் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜயை வில்லனாக நடிக்க வைத்தார் அஜித். அந்த படம் அருணுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் ஹீரோ, வில்லன் என தொடர்ந்து பல படங்களிலும் நடித்து இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டர் அருண். இதற்கு காரணம் அஜித் மட்டுமே. அறிமுகமாகி 20 வருடங்கள் கழித்துதான் அருணுக்கு இது நடந்தது.

இப்போது குட் பேட் அக்லி படத்தில் அர்ஜூன் தாஸை வில்லனாக போடு என ஆதிக்கிடம் பரிந்துரை செய்ததும் அஜித்தான். அஜித் நினைத்திருந்தால் பாலிவுட்டிலிருந்து ஒரு வில்லனை கொண்டு வந்திருக்க முடியும். இல்லை கோலிவுட்டிலிருந்தே ஒரு பெரிய நடிகரை நடிக்க வைத்திருக்க முடியும். ஆனால், சரியான வாய்ப்பில்லாத அர்ஜுன் தாஸுக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.

இப்போது குட் பேட் அக்லி ஹிட். என்னை அறிந்தால் படம் வெளியானபோது அஜித் ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகராக அருண் விஜய் மாறினார். இப்போது தன்னுடைய ரசிகர்களுக்கு அர்ஜூன் தாஸையும் பிடிக்கும் படி செய்துவிட்டார் அஜித். இனிமேல் அர்ஜூன் தாஸுக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும். ஹீரோ, வில்லன் என அவர் பல படங்களிலும் நடிக்கக் கூடும். இதைத்தான் அஜித் விரும்புகிறார்.

அதேபோல், மார்க் ஆண்டனி ஹிட் கொடுத்திருந்தாலும் ஆதிக் ரவிச்சந்திரன் ஒன்னும் பெரிய இயக்குனர் ஆகவில்லை. ஆனாலும் அவரை நம்பி குட் பேட் அக்லி படத்தில் நடித்திருக்கிறார் அஜித். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை. இனிமேல், பெரிய நடிகர்கள் ஆதிக் இயக்கத்தில் நடிப்பார்கள். வாலி படம் மூலம் எஸ்.ஜே.சூர்யாவை கொண்டு வந்தவரும் அஜித்தான். இப்படி எஸ்.ஜே.சூர்யா துவங்கி அருண் விஜய், அர்ஜூன் தாஸ், ஆதிக் ரவிச்சந்திரன் என அஜித்தால் தூக்கிவிடப்பட்டு மேலே போனவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

அஜித் அதை தொடர்ந்து செய்வார்!….

Next Story