அடக்கடவுளே! தனி ஒருவன் ‘அபிமன்யூ’ கேரக்டரை மிஸ் பண்ண கோட் நடிகர்.. இவரா?

Published on: September 4, 2024
aravind 1
---Advertisement---

Goat: ஏஜிஎஸ் தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். அந்தப் படம் மோகன் ராஜாவுக்கு மட்டுமல்ல ஜெயம் ரவிக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்த படமாக மாறியது. அதுவரை ஒரு லவ்வர் பாயாக படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தில் ஒரு முழு ஆக்க்ஷன் ஹீரோவாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார்.

அவரையும் தாண்டி அந்த படத்தில் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த்சாமி அனைவர் மனதிலும் நல்ல ஒரு இடத்தை பிடித்தார். அது அவருக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. தனி ஒருவன் படத்திற்கு முன்பு வரை ஒரு காதல் இளவரசனாகவே பார்த்து வந்த அரவிந்தசாமியை இந்தப் படத்திற்குப் பிறகு ஒரு மாஸ் வில்லனாக மோகன் ராஜா காட்டினார் .

ஒரு கெத்தான வில்லனாக ஸ்டைலிஷ் வில்லனாக அரவிந்த்சாமி நடித்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில் அரவிந்த் சாமி நடித்த அபிமன்யு கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் கோட் பட நடிகர் என்ற ஒரு செய்தி இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது .அதை அந்த நடிகரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் திரைப்படம் கோட். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து சினேகா லைலா மீனாட்சி சவுத்ரி பிரபுதேவா பிரசாந்த் மோகன் அஜ்மல் யோகி பாபு போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் வேளையில் படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொன்றாக தங்களது அனுபவத்தை பேட்டிகளின் மூலம் கூறி வருகிறார்கள்.

இதில் வெங்கட் பிரபு பிரேம்ஜி வைபவ் போன்றவர்கள் படத்தில் வைத்திருந்த பாதி சஸ்பென்சை உடைத்து விட்டனர். இந்த நிலையில் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜ்மலும் சமீபத்திய ஒரு பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறும்போது விஜய் படம் என்றதும் நான் குஷியாகிவிட்டேன்.

அதுவும் ஏஜிஎஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள் என்றதும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏற்கனவே ஏஜிஎஸ் படத்தை நான் மிஸ் பண்ணியிருக்கிறேன் என அஜ்மல் கூறினார். அதற்கு தொகுப்பாளினி அது எந்த படம் என கேட்டபோது அதற்கு அஜ்மல் தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமி நடித்த கேரக்டரில் என்னைத்தான் நடிக்க கேட்டார்கள்.

ஆனால் அந்த நேரத்தில் நான் இரண்டு மலையாள திரைப்படங்களில் கமிட்டாகி இருந்ததனால் என்னால் நடிக்க முடியவில்லை. அதனால் இந்த முறையும் அந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதனால் இந்த கோட் திரைப்படத்தில் நடிக்க வந்து விட்டேன் என அஜ்மல் கூறி இருக்கிறார் .

ajmal
#image_title

தமிழில் கோ மற்றும் நயன்தாராவுடன் ஒரு படம் ஆகிய இரண்டிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார் அஜ்மல். இவர் சொல்வதைப் போல தனி ஒருவன் படத்திலும் நடித்திருந்தால் அதிலும் தனது வில்லத்தனத்தை அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.